
இன்று உலக யோகா தினம் என்பதால் உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக அளவில் அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் யோகா செய்ய தொடங்கி விட்டனர்
காரணம்..யோகாவின் நன்மைகள் ஏராளம்...
இந்நிலையில், யோகா குறித்த விழிப்புணர்வை மக்களிடேயே ஏற்படுத்துவதற்காகவும், இன்றைய சமுதாயத்தினர் இப்போது இருந்தே யோகாவின் நன்மைகள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் பள்ளிகள் கல்லூரிகள், அலுவலகம், பார்க், பீச் என பொது இடத்தில் யோகா செய்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுவாரசியான விஷயம் என்ன வென்றால், இந்தோ-திபெத் எல்லையோர காவல்துறை அதிகாரிகள், லடாக் பனிமலையில் 18,000 அடி உயரத்தில் சூர்ய நமஸ்காரம் செய்து உள்ளனர்.
இந்த வீடியோ தற்போது வைரலாக அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும், அதிக அடி உயரம் என்பதால் ஏராளமானோருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அதையும் மீற யோகா செய்த வீரர்களின் முயற்சியையும் அதற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தையும் பார்த்து, பொதுமக்கள் அவர்களுக்கு வெகுவாக பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.