குழந்தை பேறு, அனைத்து செல்வமும் மன நிறைவும் கிடைக்க ..! இங்கு சென்று வாருங்கள்..!

 
Published : Jun 20, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
குழந்தை பேறு, அனைத்து செல்வமும் மன நிறைவும் கிடைக்க ..! இங்கு சென்று வாருங்கள்..!

சுருக்கம்

to get blessings just visit kerala temple

கேரள மாநிலம் புல்பள்ளி என்ற இடத்தில் ராமனின் மகன்களான லவன்  குசன் ஆகியோர் சீதா தேவியுடன் சேர்ந்து உள்ளவாறு உள்ள கோவில் அமைக்கப்பட்டு  உள்ளது

பதினெட்டாம் நூற்றனாடில் கட்டப்பட்ட இந்த கோவிலை மலபார் பகுதியை ஆட்சி செய்த வீர கேரள வர்மா பழசிராஜா கட்டுவித்தார்.

லவன் குசன் மற்றும் சீதா தேவியுடன் கூடிய இந்த தளம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

41 நாட்கள் நடைபெறும் சிறப்பு  பூஜைகள்...!         

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில்,அதாவது கோவில் நிறுவப்பட்ட நாளில் 41 நாட்களுக்கு சிறப்பு மண்டல பூஜைகள்  நடத்தப்படுகிறது.

இதே போன்று, 18 முதல் 23 வரையிலான நாட்களில் "சுட்டி விளக்கு திருவிழா" என்ற  சிறப்பு  திருவிழா வெகு விமரிசையாக நடைப்பெற உள்ளது.

அனைத்து செல்வமும் மன நிறைவும் கிடைக்க ..!

சீதா தேவி, லவன், குசன்  மூவருக்கும் தினமும் மூன்று வேளைகள் பூஜைகள் செய்யப் படுகிறது.

சீதா தேவிக்கு சிறந்தது  - வெள்ளை அரிசி  சாதம் மற்றும் பாயாசம்

லவன் குசன் - இனிப்பு அப்பம் வைத்து வழிபாடு செய்யப்படுவது வழக்கம்

இதன் சிறப்பு என்னவென்றால், இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு  குழந்தைபேறு கிடைக்கும் என்பது  நம்பிக்கை மற்றும் ஐதீகம்..

மேலும் செல்வங்கள் பெருகுமாம்....

மன நிம்மதியும் கிடைக்கும் என்பது ஐதீகம்...

இந்த கோவிலுக்கு செல்ல எராளமான பக்தர்கள் படை எடுத்து செல்கிறார்கள்.. அத்தகைய சிறப்பு வாய்ந்தது இந்த கோவில் என்பது  குறிப்பிடத்தக்கது.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்