ஓவர் நைட்டில் "மோடிக்கு" ரசிகரான தமிழர்கள்..! ட்ரெண்டானது #DontGoBackModi..!

By ezhil mozhiFirst Published Oct 12, 2019, 4:32 PM IST
Highlights

பொதுவாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாலும் திராவிட கட்சிகளுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாலும் இந்துத்துவா கொள்கை கொண்ட பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை என்ற போக்கு காணப்பட்டது. 

ஓவர் நைட்டில் "மோடிக்கு" ரசிகரான தமிழர்கள்..! ட்ரெண்டானது  #DontGoBackModi..!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி.

பொதுவாக தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாலும் திராவிட கட்சிகளுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாலும் இந்துத்துவா கொள்கை கொண்ட பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை என்ற போக்கு காணப்பட்டது. இருப்பினும் விடாது மேற்கொண்ட முயற்சியால், முன்பு எப்போதும் இருந்ததை விட நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று இருந்தன பாஜக.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எப்போது மோடி தமிழகத்திற்கு வந்தாலும் அவருக்கு பெரும் எதிர்ப்பே காணப்படும்.. இருந்தபோதிலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதைப்பற்றியும் சற்றும் சிந்திக்காமல் இதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தொடர்ந்து பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் அவ்வப்போது வருகை புரிந்து இருந்தார். அப்போது எல்லாம் சமூக வலைத்தளத்தில் மிகவும் ட்ரெண்டிங் #gobackmodi என்ற வாசகம் தான். 

ஆனால் சீன அதிபர் உடனான சந்திப்பிற்கு மாமல்லபுரம் வருகை புரிந்த மோடிக்கு இந்த முறை இதுபோன்ற ட்ரெண்டிங் கிளம்பவில்லை. அதாவது மோடிக்கு ஆதரவு பெருகி விட்டது. அந்த வகையில் #DontGoBackModi என்ற வாசகம் தான் தற்போது ட்ரெண்டிங் இல் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுகிறது என்பதைவிட மோடிக்கு பெரும் ஆதரவு பெருகுகிறது என்றே கூறலாம்

click me!