தமிழில் என்னவெல்லாம் ட்வீட் செய்துள்ளார் மோடி தெரியுமா...? படிக்க 5 நிமிடம் தேவை...!

By ezhil mozhiFirst Published Oct 12, 2019, 4:00 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கும் பொருட்டு ஓர் தமிழனாகவே மாறி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை துண்டு அணிந்து சீன அதிபரை வரவேற்ற விதம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

 தமிழில் என்னவெல்லாம் ட்வீட் செய்துள்ளார் மோடி தெரியுமா...? படிக்க 5 நிமிடம் தேவை...! 

சீன அதிபரும் பிரதமர் மோடியும் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கொண்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்கும் பொருட்டு ஓர் தமிழனாகவே மாறி தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை துண்டு அணிந்து சீன அதிபரை வரவேற்ற விதம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையியல் பிரதமர் மோடி அவர்கள் மாமல்லபுரத்தின் சிறப்பைப்பற்றியும் சீன அதிபருடன் சந்திப்பு பற்றியும், தமிழகம் பற்றியும், இந்த சந்திப்பு சிறப்பாக நடைபெற்றதற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு உறுதுணையாக இருந்ததற்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு பல்வேறு பதிவுகளை தமிழிலேயே டுவிட் செய்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நேற்று இரவு சீன அதிபருக்கு விருந்து அளிக்கும் பொருட்டு விருந்தினரே தமிழில் அன்போடு அழைத்தார் இவை அனைத்தும் அனைவரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதுநாள் வரை மோடிக்கு கடும் எதிர்ப்பு தமிழகத்தில் கிளம்பி இருந்தாலும், தற்போது எதிர்ப்பவர்களும் பாராட்டும் வகையில் மனம் கவர்ந்து விட்டார் மோடி என்று சொல்லலாம்.

அப்படி என்னவெல்லாம் தமிழில் ட்வீட் செய்துள்ளார் தெரியுமா..? 

1.மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

2.பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை, அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

3.மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது.

4.அதிபர் ஷி ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டு களித்தோம். ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஐவர் ரதச் சிற்பங்கள்.

5. இந்த நினைவிடத்தில், தர்மராஜன் ரதம், பீமன் ரதம், அர்ஜூனன் ரதம், நகுலன்- சகாதேவன் ரதம் மற்றும் திரவுபதி ரதம் ஆகியவை உள்ளன.

6.வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது. அலைவாய்க் கோவிலில் இருந்து மேலும் சில படங்கள் இதோ....

7. மாமல்லபுரத்தில் அதிபர் ஷி ஜின்பிங்குடன் ஆலோசனைகள் தொடர்கின்றன. இந்திய - சீன உறவினை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

8. நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்.

 

நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-சீன உறவுகளுக்கு மேலும் உந்து சக்தியை அளிக்கும். இது நமது நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும். pic.twitter.com/UmfVyP3iuQ

— Narendra Modi (@narendramodi)

9.தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

10.மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி.

11.அழகிய மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய- சீன முறை சாரா உச்சி மாநாட்டிற்கு உறுதுணை புரிந்து உபசரிப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக கலாச்சார அமைப்புகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேற்குறிப்பிட்ட  அனைத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிலேயே பதிவிட்ட பதிவுகள் ஆகும் 


 

click me!