இன்று உலக தூக்க தினம். தூக்கம் ஆரோக்கியத்தை முதன்மைப்படுத்த,
அப்பல்லோ ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை சார்பில் முதல் உறக்க ஆரோக்கிய மனிதச் சங்கிலியை தொடங்கியுள்ளது.
இன்று (மார்ச்.14) வெள்ளிக்கிழமை உலக தூக்க தினம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2வது வெள்ளிக்கிழமை அன்று உலக தூக்க நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஆனது தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உலக அமைப்பினால் 2008ஆம் ஆண்டு முதல் நினைவுக்கூரப்படுகிறது. அந்தவகையில், தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக வானகரத்தைச் சேர்ந்த அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இந்தியாவின் முதல் தூக்கம் ஆரோக்கிய மனித சங்கலியை இன்று தொடங்கியுள்ளது. இந்த சிறப்பான முன்னறிவிப்பை இந்த ஆண்டின் உலக தூக்க நாள் என்று தொடங்கியுள்ளனர்.
" தூக்கம் ஆரோக்கியமே முதன்மையாக கவனிக்க வேண்டியது" என்ற உள்ளடக்கத்தை கொண்டு மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு உறக்கம் தொடர்பான பொன்மொழிகள் எழுதப்பட்ட தலையணைகளை கொண்டு இந்த மனித சங்கிலியை தொடங்கினர்.
இதையும் படிங்க: இரவு படுத்தவுடனே தூக்கம் வர வேண்டுமா? இந்த '5' மட்டும் செய்தால் போதும்!!
ஏன் இந்த மனித சங்கிலி?
இந்தியாவில் சுமார் 60 சதவீதம் பேர் சரியான தூக்கம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த மனித சங்கிலி வழியாக தூக்கம் என்பது ஆடம்பரம் அல்ல, உயிரியல் தேவை என்று சக்தி வாய்ந்த வகையில் நினைவூட்டுவதன் நோக்கமாகும். மோசமான தூக்கம் காரணமாக இதை என் நோய் சர்க்கரை நோய் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு மனநல குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்தும். தூங்குவதற்கான நேரத்தை திட்டமிடுவது, டிவி, மொபைல் போன்கள் அதிக நேரத்தை செலவிடாமல் இருப்பது மற்றும் தேவைப்படும் சமயத்தில் மருத்துவர் உதவியை நாடுவது ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை இந்த உறக்க மனித சங்கிலி இயக்கம் மூலம் பரப்பப்பட்டது.
இதையும் படிங்க: இரவு தூக்கம் வராமல் அவதிப்படுறீங்களா? இந்த '6' உணவுகள் சாப்பிடுங்க.. நல்லா தூக்கம் வரும்!
இந்த மனித சங்கிலி குறித்து துறை தலைவர் மற்றும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்ப் ஹெல்த் பிரிவின் கிளினிக் தலைவர் டாக்டர் திரு கார்த்திக் மாதேஷ் கூறுகையில், 'தூக்கம் என்பது ஆரோக்கியத்தின் அடித்தளம். ஆனாலும் அதன் முக்கியத்துவம் நம்மிடம் பெரிதாக இல்லை. அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன்னெடுக்கும் இந்த உறக்கமனித சங்கிலி போன்ற முயற்சிகள், தூக்கம் என்பது வெறுமனே வாழ்க்கை தேவை சார்ந்த தேர்வு என்பதையும் தாண்டி, உயிரியல் தேவை என்பதையும் வலியுறுத்துகின்றன. தூக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான தூக்கத்துக்கான வழிமுறைகளை முன்னெடுப்பதன் மூலம் நாம் ஆரோக்கியமான சமூகத்திற்கு பங்களிப்பு செய்யலாம். இந்த முயற்சி முன்னெடுக்கும் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின்
உறுதில்பாட்டை பாராட்டுகிறேன் என்று கூறினார். மேலும், தூக்கம் சமூக நலனுக்கு முக்கியமானது. சமூக மக்களிடையே உறக்க ஆரோக்கியத்தை முன்னேற்றும் முயற்சிகளை எடுப்பதற்காக அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு வாழ்த்துக்கள்' என்று அவர் கூறினார்.
அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உறக்க ஆரோக்கியத்திற்கான ஆய்வு பிரிவும் இயங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.