Women self defense tips: மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் சிறப்பு தொகுப்பாக, இங்கே சொல்லப்பட்டுள்ள தற்காப்பு நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றுவதுடன், உங்களின் சக தோழிகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்றெல்லாம் வசை பாடினாலும், பெண்களை பாலியல் பண்டமாக பார்க்கும் சிலரால், பெண்களின் பாதுகாப்பு என்பது இன்று வரை கேள்வி குறியாகவே உள்ளது. எனவே, ஆபத்து நேரத்தில் பெண்கள் தங்களை தற்காத்து கொள்ள தேவையான வழிமுறைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இரவு நேர பணிக்கு செல்லும் பெண்கள், மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல், ஆபத்து நேரத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் சிறப்பு தொகுப்பாக, இங்கே சொல்லப்பட்டுள்ள தற்காப்பு நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றுவதுடன், உங்களின் சக தோழிகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
செல்போனை ஆபத்து நேரத்தில் சரியாகப் பயன்படுத்துவதற்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் செல்போன் ஹிஸ்டிரி ( history) பட்டியலில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண் மேலே இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவசரகாலத்தில் அழைப்பது உதவியாக இருக்கும்.
அதுமட்டுமின்றி, காவல்துறையின் உதவியை நாடுவதற்காக எப்போதும் ‘100’ என்ற அவசர உதவி எண்ணைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
தற்காப்புக் கலை தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்:
தற்காப்புக் கலை தெரியாதவர்கள், பதற்றம் அடையாமல் உடனே எதிராளியின் கண், முகம், கை, மார்பு, கால் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குவதற்கு முற்பட வேண்டும். இதன் மூலம் அவர் நிலைத் தடுமாறும் போது, நீங்கள் அங்கிருந்து நகர்ந்து பாதுகாப்பான இடத்திற்குச் செல்லலாம்.
எப்போதும் உங்கள் கைபையில் பேப்பர் ஸ்ப்ரே வைத்திருங்கள்:
பேப்பர் ஸ்ப்ரே, கூர்மையான பென்சில், சேப்டி பின் போன்ற சில பொருட்களை எப்போதும் உங்கள் கைபையில் வைத்திருங்கள்.ஒரு அந்நியன் அல்லது எதிராளி உங்களை வற்புறுத்த முயற்சித்தால், உடனடியாக அதை அவரது கண்களில் தெளிக்கலாம். பென்சில், சேப்டி பின் கொண்டு கண்களில் குத்தி விடலாம்.அப்போது நீங்கள் தப்பிப்பது எளிதாக இருக்கும்.
பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களிடம் தனிப்பட்ட தகவல்களை வழங்கும்போதும், மொபைல் போன் ரீசார்ஜ் செய்வதற்காக எண் விவரங்களைத் தெரிவிக்கும்போதும் கவனத்துடன் கையாள வேண்டும்.
செல்போனில் சார்ஜ் முழுவதுமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் :
பெண்கள் வீட்டை விட்டு வெளியேறும் முன் உங்கள் செல்போனில் முழு சார்ஜ் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இரவில் பயணம் செல்ல வேண்டியது இருந்தால், அந்த சமயத்தில்
உங்கள் ஃபோனின் ஜி.பி.எஸ் பட்டனை அழுத்தி, அதை உங்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு ஷேர் செய்ய வேண்டும். ஏனெனில், நீங்கள் வீட்டிற்கு வர தாமதம் ஆனாலும், சில சமயம் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் அவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.
நீங்கள் வீட்டில் தனியாக இருந்தால், கதவை பூட்டி விட்டு உள்ளிருப்பது அவசியம். காளிங் பெல் அடித்த உடனே அடித்த உடனே கதவைத் திறக்காதீர்கள். யார் என்று பரிசோதித்த பிறகு கதவை திறக்கவும்.
மேலும்,தமிழக அரசு பெண்களின் பாதுகாப்புக்காகவே ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் அந்த செயலியை பரிசோதித்து பதிவிறக்கம் செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.