Kaal bhairav temple: சனி பெயர்ச்சியால், ஏழரை சனியின் பிடியில் இருந்து தப்பிக்க, செய்ய வேண்டிய எளிய சனி பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
சனி பகவானின் அருள் கிடைத்துவிட்டால், ஆண்டியும் அரசனாகலாம் என்பது உண்மைதான். ஆனால், பலரும் பயப்படும் கிரகம் என்றால் அது சனியின் கிரகம் தான். ஆகையால், சனியின் சிறு மாற்றமும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
சனி கிரகம், நவகிரகங்களில் முக்கிய கிரகமாகவும், ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் ஆகும். சிலருக்கு நீண்ட அருள் கொடுப்பவராகவும், தவறு என்றால் தட்டி கேட்பவராகவும் திகழ்கிறார். மொத்தத்தில், கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி, நீதி தேவனாக செயல்படுகிறார்.
ஜோதிடத்தில், சனி பெயர்ச்சி துவங்க உள்ளது. சனி ஒரு வருடத்திற்கு பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி, மகர ராசிக்கான தனது பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த பயணம், சில ராசிகளில் வாழ்வில் கடுமையான பாதிப்பை உண்டு பண்ணும். சனிபகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கின்றார் என்றால், அவர் அமரக் கூடிய ராசிக்கும், அதோடு அந்த ராசியின் முன் மற்றும் பின் உள்ள ராசிக்கு ஏழரை சனி என்று பெயர்.
undefined
எனவே, அவர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து தப்பிக்க, செய்ய வேண்டிய எளிய சனி பரிகாரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
சனி பெயர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டும் ராசியை சேர்ந்த நபர்கள் முதலில் செய்ய வேண்டியது, அவர்கள் செய்த தவறை உணர்ந்து வருந்தி, கீழே சொன்ன பரிகாரங்களை செய்து சனி பகவானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்து முறைப்படி, கால பைரவரின் சன்னதியில் 16 சனிக்கிழமைகளுக்கு தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் படிப்படியாக நின்றுவிடும்.
வழிபடும் முறை:
புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து நல்லெண்ணெயில் நனைத்து முடிய வேண்டும். பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும்.
அதன் பின்னர், அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும். அந்த நீலப்பொட்டலத்தில் 8 தீபங்களை ஏற்ற வேண்டும்.
இவ்வாறு 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர ஏழரை சனியின் தாக்கம் படிப்படியாக நின்றுவிடும்.