பெண்களின் பிறப்புறுப்பில் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா வளர்ச்சியும் அதிக அளவில் இருந்தால் அது நாளடைவில் பெரிய பிரச்சனையாக கூட மாற வாய்ப்புகள் உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். ஏனெனில் இது பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பிறப்புறுப்பு வலிக்கு பல காரணங்கள் உள்ளன. அது குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.
பிறப்புறுப்பு பராமரிப்பு
உடலின் மற்ற பாகங்களைப் போலவே, பிறப்புறுப்பு ஆரோக்கியத்திலும் அதிக கவனம் தேவை. உண்மையில், பல பெண்கள் பிறப்புறுப்பில் வலி மற்றும் எரிச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இது அவர்களது பாலியல் வாழ்க்கையும் பாதிக்கிறது. மேலும், பெண்களை பொறுத்தவரை, அவர்கள் பிறப்புறுப்பில் உள்ள ஈரப்பதம் காரணமாக பாக்டீரியா வேகமாக வளரும். சரி பெண்ணுறுப்பின் வலிக்கான உண்மையான காரணங்களை அறிந்து கொள்வோம்.
செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் சிம்பிள் டிப்ஸ்.. தம்பதிகளே கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..
வோல்வோ சிஸ்ட்
பெண்ணுறுப்பு அருகில் உள்ள கட்டிகள் சினைப்பை நீர்க்கட்டிகளாக இருக்கலாம். அவை பெண்ணுறுப்புக்கு அருகில் உருவாகின்றன. இவை பார்தோலின் நீர்க்கட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த நீர்க்கட்டி உடலுறவின் போது வலியை ஏற்படுத்துகிறது. நீர்க்கட்டிகள் வளர்ந்தால், சிகிச்சை அவசியம். இதனால் உட்காருவதற்கு கூட சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பாக்டீரியா தொற்று
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் அளித்த ஆய்வு முடிவுகளின்படி, vaginitis என்ற நிலை அடிவயிற்றில் வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. உண்மையில், துணையுடன்கொள்ளும் உடலுறவின் போது, சுகாதாரத்தை பேண முடியாமல் இருப்பதும் மற்றும் பாக்டீரியா தொற்று போன்றவை இந்த பிரச்சனையை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது பிறப்புறுப்பு வலியையும் ஏற்படுத்தும். ஆனால் இது முதலில் வலியை ஏற்படுத்தாது. ஆனால் கடுமையான துர்நாற்றம், கால்களில் வீக்கம் ஆகியவை இந்த புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகு பெண்களுக்கு இந்தப் புற்றுநோய் வருகிறது என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது வலியும் ஏற்படும்.