மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கங்காதரன் கடையில் டிக்கெட் வாங்கிய மேலும் ஆறு பேருக்கும் தலா ரூ.5,000 பரிசு கிடைத்துள்ளது.
கேரளாவில் ஒரு லாட்டரி விற்பனை ஏஜென்ட் தனது கடையில் விற்காமல் கைவசம் இருந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் மூலம் மாநில அரசின் 50:50 லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசைத் தட்டிச்சென்றிருக்கிறார்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த என்.கே.கங்காதரன் வெற்றி பெற்ற சீட்டு தன்னிடம் இருப்பதை அறிந்து பத்திரமாக வைத்திருந்தாராம். தன்னிடம் உள்ள வெற்றி பெற்ற லாட்டரி திருடப்பட்டுவிடுமோ என்று பயந்து அதை வங்கியில் ஒப்படைக்கும் வரை ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்ததாக கூறுகிறார்.
undefined
33 ஆண்டுகள் பஸ் கண்டக்டராக பணியாற்றிய கங்காதரன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரி கடை திறந்திருக்கிறார். நான்கு ஆண்டுகளில் தனது கடைக்கு பரிசு கிடைப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் சொல்கிறார். மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவரிடமிருந்து டிக்கெட் வாங்கிய மேலும் ஆறு பேருக்கும் தலா ரூ.5,000 பரிசு கிடைத்துள்ளது.
எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது! இந்திய விமானப் படைக்கு புகழாரம் சூட்டிய ஆனந்த் மஹிந்திரா
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அபுதாபியின் பிக் டிக்கெட் லாட்டரியில் 20 மில்லியன் திர்ஹாம் (சுமார் ரூ. 44 கோடி) பரிசை வென்ற இந்தியர் ஒருவர் ஒரே நாளில் கோடிஸ்வரர் ஆனார். லாட்டரி நிறுவனத்தினர் அப்போது பெங்களூருவில் இருந்த அருண் குமாருக்கு இதுபற்றிய தகவலைச் சொல்ல போனில் அழைத்துள்ளனர். முதலில் அவர்கள் சொன்ன செய்தியை அருண் நம்பவில்லை. மோசடி அழைப்பு என்று நினைத்து அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டார். ஆனால் அதிர்ஷ்டம் மீண்டும் அவரைத் தேடி வந்து அழைத்தது.
“பிக் டிக்கெட்டில் இருந்து போன் வந்தபோது, அது போலியானது என்று நான் கருதினேன். லைனைத் துண்டித்து அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டேன். சிறிது நேரத்திற்குப் பிறகு, எனக்கு வேறு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. இந்த முறை லாட்டரி அதிகாரிகள் தகவலை உறுதியாகச் சொன்னதால் நம்பிக்கை வந்தது" என்று சொல்கிறார் அருண் குமார்.
“நான் இந்த டிக்கெட்டை ‘இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற சலுகை மூலம் வாங்கினேன். நான் முதல் பரிசு பெற்றேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் இன்னும் அதை நம்ப முடியாமல்தான் இருக்கிறேன்” என்று வியப்புடன் சொல்கிறார் அருண்.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: தரைமட்டமான 1,328 வீடுகள், பலி எண்ணிக்கை 2000 க்கு மேல் அதிகரிப்பு!