பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் ஆண்மைக்குறைவு.. என்ன காரணம்? இந்த உணவுகள் பயன் தருமாம் - நிபுணர்களின் டிப்ஸ்!

By Asianet Tamil  |  First Published Oct 7, 2023, 11:58 PM IST

ஆண்களை பொறுத்தவரை ஆண்மைக்குறைவு அல்லது விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு ஊட்டச்சத்து குறைபாடே முக்கிய காரணம். ஆம், ஆண்களின் உடலில் சத்துக்கள் இல்லாததால் இந்தப் பிரச்சனை ஏற்படுவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..


விந்தணு எண்ணிக்கை

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தை பெறுவது கடினம். இது திருமண வாழ்க்கையில் பல முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. மேலும், பாலியல் வாழ்க்கையும் இதனால் பாதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஆய்வின் படி.. பல்வேறு பழங்கள், காய்கறிகள், மீன்கள் உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிவப்பு இறைச்சி, பொரித்த உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் இனிப்புகளை அறவே குறைக்க வேண்டும். சரி விந்தணு அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்..

Latest Videos

undefined

முட்டைகள்

முட்டை என்பது ஒரு முழுமையான உணவு ஆகும். முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளது, இதில் வைட்டமின்களும் அதிகம் உள்ளது. இது விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் விந்தணு இயக்கத்தை மேம்படுத்துகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

வாழை

வாழைப்பழம் உடனடி ஆற்றலை வழங்குகிறது. இந்த பழத்தில் மெக்னீசியம், வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதியும் உள்ளது. இது விந்தணு இயக்கத்திற்கு உதவுகிறது.

கீரை மற்றும் பூண்டு 

கீரை விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஃபோலிக் அமிலம் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் பூண்டுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல உடல்நல பிரச்சனைகளை குறைக்கிறது. இதில் செலினியம் என்ற நொதி உள்ளது. இது விந்தணு இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது.

வால் நட்ஸ்

வால் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் பல பிரச்சனைகள் நீங்கும். இவை ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கவும் மிகவும் உதவியாக இருக்கும். அவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை விந்தணு இயக்கத்தை மேம்படுத்தும்.

click me!