கொரோனாவுக்கு பயந்து மகனை ரயில்வே விடுதியில் தங்க வைத்த பெண் அதிகாரி சஸ்பெண்ட்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2020, 10:09 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், வெளிநாடு சென்று திரும்புவோர் அரசிற்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ரயில்வே பெண் அதிகாரி ஒருவர் தன் மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மறைத்து ரயில்வே விடுதியில் தங்க வைத்துள்ளார். நாடே அவசர கோலத்தில் இருக்கும் போது அரசு அதிகாரி ஒருவர் இப்படி நடந்து கொண்டதால் அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

T.Balamurukan

 தென்மேற்கு ரெயில்வேயில் உதவி பணியாளர் நலத்துறையில் போக்குவரத்து அதிகாரியாக இருக்கும் ஒரு பெண்மணியின் மகன், ஜெர்மனிக்கு சென்று விட்டு, ஸ்பெயின் வழியாக கடந்த 13-ந் தேதி பெங்களூரு திரும்பினார். அப்போது விமான நிலைய 'தெர்மல் ஸ்கேனர்' பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டது. அப்போது அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

 வீட்டில் தங்க வைத்தால், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் பரவி விடும் என்று கருதிய அந்த பெண் அதிகாரி, பெங்களூரு ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே தங்கும் விடுதியில் மகனை தங்க வைத்தார். மகன் வெளிநாடு சென்று வந்ததை கர்நாடக அரசிடமோ, ரெயில்வே துறையிடமோ தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.

அந்த விடுதியில் சில ரெயில்வே அதிகாரிகளின் குடும்பத்தினரும் தங்கி இருந்திருக்கிறார்கள்.அங்கு தங்கி இருந்தபோது,அந்த பெண் அதிகாரியின் மகன்,மருத்துவ பரிசோதனைக்காக, வெளியே ஆஸ்பத்திரிக்கு சென்று வந்துள்ளார்.அப்போது ,அந்த வாலிபருக்கு கொரோனா தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.இந்த தகவல் தெரிய வந்தவுடன் ரெயில்வே நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது.மகன் வெளிநாடு சென்று வந்ததை மறைத்ததுடன், மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்வகையில் ரெயில்வே விடுதியில் தங்க வைத்ததற்காக, பெண் அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளது ரயில்வே நிர்வாகம்.

click me!