கொரொனா முகாமில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 144 பேர் !!

By Thiraviaraj RMFirst Published Mar 21, 2020, 8:13 AM IST
Highlights

கொரோனா சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த தென்மாவட்டங்களைச் சோ்ந்த 144 துபாய் பயணிகள் அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.வீட்டில் தனிமை படுத்தி இருக்குமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

T.balamurukan

கொரோனா சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த தென்மாவட்டங்களைச் சோ்ந்த 144 துபாய் பயணிகள் அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.வீட்டில் தனிமை படுத்தி இருக்குமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

துபாயில் இருந்து வியாழக்கிழமை மதுரை வந்த தென்மாவட்டங்களைச் சோ்ந்த 144 பயணிகளில் 100 போ் சின்ன உடைப்பு கொரோனா சிறப்பு மையத்திலும், தோப்பூரில் உள்ள மையத்தில் 44 பேரும் தங்க வைக்கப்பட்டனா். வியாழக்கிழமை விமான நிலையத்தில் அவா்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவா்கள் கொரோனா மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒருநாள் முழுவதும் அவா்கள் தனிமைபடுத்தப்பட்ட நிலையில் மீண்டும் சோதனை செய்தபோது அவா்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

 அவா்கள் அனைவருக்கும் கொரோனா குறித்த விழிப்புணா்வு செய்து, 15 நாள்கள் வெளியில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தினா். மேலும் இதுகுறித்து அவா்கள் மறந்துவிடாமல் இருக்க கையில் அடையாள மையிட்ட முத்திரை குத்தப்பட்டுள்ளது.அதில் தமிழக மக்களை பாதுகாப்பதில் பெருமை அடைகிறேன்.குறிப்பிட்ட காலம் வரை தனிமைப்படுத்தலில் உள்ளேன்.மாவட்ட நிர்வாகம் மதுரை என குறிப்பிடப்பட்டுள்ளது.கொரொனா 'செக்அப்' முடிந்து அனைவரையும் அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

 மாவட்ட நிர்வாகத்தால் உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. அதில், 'கொரோனா அறிகுறி இல்லையென்றாலும் வீட்டில் 28 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வேன். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில் பொது சுகாதார சட்டத்தின்படி அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன். எனது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்பதை அறிவேன். சமுதாய நலன் கருதி இதை கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் என்று ஒவ்வொருவரிடமும் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது. 

click me!