
ருத்ராட்சம் அணிபவரா நீங்கள்..? இதை தெரிந்துகொள்ளுங்கள் முதலில்...!
ருத்ராட்சம் அணியும் சில நபர்கள் எதற்காக ருத்ராட்சத்தை அணிந்து உள்ளார்கள் என்பதை தெரிந்துகொள்ளாமலே அணிகின்றனர்.
சிலர் நன் எப்போதும் கோபப்படமாக இருக்க வேண்டும்...நல வழியில் செல்ல வேண்டும்,கடவுள் பக்தி உடையவன் என பல காரணங்களை சொல்வார்கள்.
ஆனால் எதற்காக ருத்ராட்சம் அணிகின்றனர்..இதற்கான பின்கதை என்ன என்பதை பார்க்கலாம்.
கைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் ""சுவாமி! தங்களுக்கு ஏழரைக்காலம் நெருங்குவதால், என் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும்'' எனக் கேட்டார்."என்ன விளையாடுகிறாயா? ஏழரை ஆண்டு அல்ல! ஏழரை நாழிகை கூட உன்னால் என்னை நெருங்க முடியாது,'' என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். சிறிது நேரம் கடந்ததும், சுயரூபம் காட்டிய சிவன், "சனீஸ்வரா! தோற்றுப் போனாயா?'' என்றார்.
"ஈஸ்வரா! என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே'' என சிரித்தார் சனீஸ்வரர்.
யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலைநாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார்.
நம்பிக்கை
ருத்ராட்சம் அணிந்து சிவநாமம் ஜெபிப்போருக்கு, சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப்பட்டார்.
இது தான் பின்கதை,அதாவது ஏழரை சனி நடக்கும் போது,ஏற்படும் பிரச்சனைகள் கூட மாயமாக சென்று விடும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் தான் ருத்ராட்சம் அணிவர்.இது தான் ஐதீகம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.