சாப்பிட்ட பின் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க, உணவு முறைகள் மற்றும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மருத்துவர் சிவப்பிரகாஷ் கூறுகிறார்.
இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் நீரிழிவு நோயின் தலைநகராக இந்தியா மாறி உள்ளது. உலகளாவிய நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வசிக்கின்றனர்.
212 மில்லியன் பேருக்கு இந்தியாவில் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளது. இதனால் இந்தியாவில் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக சர்க்கரை நோய் மாறி உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சரி, சர்க்கரை நோய் இல்லாதவர்களும் சரி, சாப்பிட்ட உடனே சர்க்கரை அளவு அதிகரிப்பதாக கூறுகிறனர். சாப்பிட்ட உடனே இப்படி உயரும் சர்க்கரையை கட்டுப்படுத்த எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் டாக்டர் சிவ பிரகாஷ் கூறியுள்ளார்.
சர்க்கரை நோயை விரட்டும் முள் சீத்தாப்பழம்.. இந்த பழத்தில் இவ்ளோ நன்மைகளா?
இதுகுறித்து பேசிய அவர் “ நாம் உண்ணும் உணவு வேகமாக வயிற்றில் காலியாகும் போது அது ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்துகிறது. வேகமாக சாப்பிடும் போது நமது வயிறும் வேகமாக நிரம்புகிறது, இதனால் வயிறு காலியாகும் போது ரத்ததில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
இப்படி வேகமாக உயரும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நீங்கள் சாப்பிடும் வேகத்தை குறைக்க வேண்டும். அதாவது 5 நிமிடத்தில் சாப்பிட வேண்டிய உணவை 20 நிமிடங்களில் சாப்பிட வேண்டும். பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை பயன்படுத்தி சமைக்கப்படும் சாதம், இட்லியை தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதிவில் யானைக்கவுனி, மாப்பிள்ளை சம்பா, மற்றும் சிறுதானியங்கள் சாதமாக வடித்து சாப்பிடலாம். பாலிஷ் செய்யமல் சாதகமாக சாப்பிடும் போது மட்டுமே குறைவாக சாப்பிட முடியும். அதே நேரம் வேகமாக சாப்பிட முடியாது.
இதனால் சாப்பிட்ட பின்னர், ரத்தத்தில் சர்க்கரை அளவு சதிகரிப்பது குறையும். நார்ச்சத்துள்ள, காய்கறிகள், தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கிரீன் டீ vs இஞ்சி டீ - எந்த 'டீ' எடையை குறைப்பதில் சிறந்தது? பலரும் அறியா தகவல்
சாப்பிட்ட பின்னர் ரத்த்த்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது, பின்னர் வேகமாக குறைவது நல்லது. இது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோய் இருந்தாலும் சரி, சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் சரி உணவு சாப்பிடும், நேரம், முறை, தரம் ஆகியவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக மாவுச்சத்து உள்ள பொருட்களை சாப்பிடுவதற்கு முன், புரதச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள், முதலில் மாமிசத்தை சாப்பிட்ட பின்னர் மாவுச்சத்து உணவுகளை சாப்பிடலாம்.” என்று தெரிவித்தார்.