1000 கோடி மதிப்புள்ள வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தியவர்!

By SG BalanFirst Published Jan 17, 2023, 6:15 PM IST
Highlights

அண்மையில் துருக்கியில் காலமான எட்டாவது ஹைதராபாத் நிஜாமின் தாத்தா சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வைரக்கல்லை பேப்பர் வையிட்டாக பயன்படுத்தியிருக்கிறார்.

ஹைதராபாத்தின் எட்டாவது நிஜாமாக இருந்த முஹர்ரம் ஜா பகதூர் கடந்த வியாழக்கிழமை துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் காலமானார். ஜாவின் தாத்தா மிர் ஒஸ்மான் அலி கான் அந்த காலத்தில் உலகத்திலேயே நம்பர் ஒன் பணக்காரராகக் கருதப்பட்டவர். அவருடைய பெயரில் இருந்த சொத்து மதிப்பு 236 பில்லியன் டாலர். அவர் 1967ஆம் ஆண்டு 80 வயதில் இறந்துபோனார்.

கடைசி நிஜாமாக இருந்த அவருடைய சொத்துகள் பற்றிய விவரம் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், சில்வர் கோட் த்ரோன் கார் முதலிய விலைமதிப்பில்லாத பல பொருள்களின் சொந்தக்காரராக இருந்தவர். அவர் பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தியது ஒரு விலைமதிக்கமுடியாத வைரக்கல்! இப்போது அந்த வைரக்கல்லின் மதிப்பு 1000 கோடி ரூபாய் இருக்கலாம் என்று கணிக்கிறார்கள். அதைத்தான் ஒஸ்மான் அலி கான் பேப்பர் வெயிட்டாகப் உபயோகப்படுத்தியுள்ளார்.

ஒஸ்மானின் தந்தை, ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாம், மஹ்பூப் அலி கான் இந்த விலைமதிப்பில்லாத வைரக்கல்லை தனது காலணியில் பதித்து வைத்திருந்தாராம். அவரது மரணத்துக்குப் பின்பு சௌமஹல்லா மாளிகையில் அந்த காலணி வைக்கப்பட்டிருந்தது. அவரது மகன் ஒஸ்மான் அலி கான் அதிலுள்ள வைரக்கல்லை எடுத்து பேப்பர் வெயிட்டாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

யார் இந்த ரவிக்குமார்? அம்பானியை விட அதிகம் சம்பளம் பெறுபவர் இவர்தான்!

நிஜாம்களின் காலத்துக்குப் பிற்கு நிஜாம் டிரஸ்ட் வசம் இருந்த அந்த வைரக்கல்லை இந்திய அரசு 1995ஆம் ஆண்டு 13 மில்லியன் பவுண்டு விலை கொடுத்து வாங்கியது. இப்போது அந்த வைரக்கல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுலவகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.

பாலிஷ் செய்யப்பட்ட 184.75 கேரட் (40 கிராம்) வைரம் உலகின் ஐந்தாவது பெரிய பாலிஷ் செய்யப்பட்ட வைரம் இது. ஹைதராபாத் நிஜாம் இந்த வைரத்தை பெல்ஜியத்தைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். அதனால் இதனை ‘ஜேக்கப்பின் வைரம்’ என்று அழைக்கிறார்கள். ஜேக்கப் தனது நிறுவனம் நஷ்டத்தில் இருந்தபோது அதனைச் சமாளிக்க வெறும் 25 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத் நிஜாமிடம் விற்றார். ஆனால், கடைசியில் அவர் தனது நிறுவனத்தை காப்பாற்ற முடியவில்லை. இந்தியாவில் வசித்துவந்த ஜேக்கப் 1921ஆம் ஆண்டு மும்பையில் காலமானார்.

யூடியூப் மூலம் சம்பாதித்து ஆடி கார் வாங்கிய இளைஞர்

click me!