Kerala Tour:கடவுளின் தேசத்துக்கும் இடம்! உலகளவில் 52 சுற்றுலாத் தளங்களில் கேரளா தேர்வு! New York Times கணிப்பு

By Pothy RajFirst Published Jan 14, 2023, 4:01 PM IST
Highlights

2023ம் ஆண்டில் உலகளவில் பார்க்க வேண்டிய 52 சுற்றுலாத் தளங்கள் குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு நடத்திய சர்வேயில், கடவுளின் சொந்த தேசமான கேரளாவும் இடம் பெற்றுள்ளது.

2023ம் ஆண்டில் உலகளவில் பார்க்க வேண்டிய 52 சுற்றுலாத் தளங்கள் குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு நடத்திய சர்வேயில், கடவுளின் சொந்த தேசமான கேரளாவும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் இருந்து ஒரேஒரு மாநிலம், அதுவும் கேரளா மட்டும்தான் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு நடத்திய சர்வேயில் உலகளவில் 13வது இடத்தில் கேரள மாநிலம் இடம் பெற்றுள்ளது. கேரளாவில் உள்ள அழகிய கடற்கரைகள், பேக்வாட்டர் பகுதிகள், உணவுகள், ஹோட்டல்கள், கலாச்சாரம் ஆகியவற்றுக்காக உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதிலும் கேரளாவில் குறிப்பாக ஆழப்புழா மாவட்டத்தில் உள்ள குமரகம் மற்றும் மறவன்துருத்து இடம் பெற்றுள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் அங்கீகாரத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துல்ளார். சமூக சுற்றுலா அணுகுமுறையின் அங்கீகாரம் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சிஏஏ மூலம் முஸ்லிம்களை புறக்கணிப்பதற்கு இந்தியா ஒருநாள் வருத்தப்படும்: அமர்த்தியா சென் கவலை

முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு, உலகளவில் 2023ம் ஆண்டில்  பார்க்க வேண்டிய 52 சுற்றுலாத் தளங்களில் கேரள மாநிலத்தையும் தேர்வு செய்துள்ளது. கேரளாவின் செழுமையான கலாச்சாரம் மற்றும் நிலப்பரப்புகளை ரசிக்க சர்வதேசப் பயணிகளை அனுமதிக்கும் எங்களின் சமூக சுற்றுலாவுக்கான எங்கள் அணுகுமுறைக்கு பாராட்டு கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கேரளா குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளேடு தனது குறிப்பில் “ பனை மரம் ஏறவும், ஆண்டு திருவிழாவில் கோயில் செல்லவும், கிராமிய வாழ்க்கையின் சுவையை அறியவும் கேரளாவில் முடியும் எனத் தெரிவித்துள்ளது.

கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் பிஏ.முகமது ரியாஸ் வெளியிட்ட அறிக்கையில் “ இது உண்மையில் சாதனை. மாநிலத்தின் சமூகம் சார்ந்த விருந்தோம்பல் மற்றும் பயணங்களுக்கான இடத்துக்கான உலகளாவிய அங்கீகாரம். உள்நாட்டு சமூகத்தினரின் மேம்பாட்டால் மட்டும்தான் அர்த்தமுள்ள சுற்றுலாத்துறை வளர்ச்சி அடையும் என கேரள அரசு கருதியது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான சர்வதேச கவுரவம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!திரிபுராவில் பரமவைரி காங்கிரஸ்,சிபிஎம் தேர்தலுக்காக கைகோர்ப்பு

டைம் இதழ் கடந்த ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், “ 2022ம் ஆண்டில் உலகளவில் சுற்றிப்பார்க்க வேண்டிய சுற்றுலாத் தளங்களில் கேரளாவும் ஒன்று. உலகளவில் சிறந்த 30 இடங்களில் கேரளாவின் அய்மனம் கிராமம் சிறந்த இடம்”என சான்றளித்தது. டிராவல் அன்ட் லீஷர் இதழ், குலோபல் விஷன் விருதை கேரள அரசுக்கு வழங்கி கவுவித்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!