vastu tips: வாஸ்து சாஸ்திரங்களின்படி, வீட்டில் செருப்பு வைக்க வேண்டிய திசை குறித்து தெரிந்து கொள்வது அவசியம். எந்த திசையில் அவற்றை வைக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
வாஸ்து சாஸ்திரங்கள் வீட்டின் நன்மைக்காக பல விஷயங்களை கூறுகின்றன. இதனை பின்பற்றுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என இந்து சமயத்தில் நம்பிக்கை உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை சில திசையில் வைப்பதால் பிரச்சனை உண்டாகிவிடும். பொருள்களை சரியான திசை, இடம் ஆகிவற்றில் வைக்காவிட்டால் அது வாஸ்து தோஷம் இருப்பதை குறிக்கிறது. இதனால் பொருளாதார பிரச்சனை, குடும்ப பிரச்சனை, நிம்மதியின்மை கூட ஏற்படலாம். இதற்கு செருப்பு வைக்கும் திசையும் ஒரு காரணியாக இருக்கும். எந்த திசையில் செருப்பை வைக்க வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
நாம் வெளியில் சென்று விட்டு திரும்பும்போது கழற்றி வைக்கும் செருப்பு நேராக மட்டுமே இருக்க வேண்டும். தலைகீழாக இருக்க கூடாது. செருப்புகளை வாசலில் நேராக அடுக்கி வைக்க வேண்டும், கலைத்தோ சிதறியோ கிடக்கும்படி வைக்கக் கூடாது. இப்படி சிதறிய காலணிகள் சனியின் கெட்ட பலன்களை பெற்று தரும். செருப்புக்கும், சனிக்கும் தொடர்பு உண்டு என்பதால் அந்த தவறை செய்யாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.
செருப்பை முறையாக அடுக்காமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக விடுவது வீட்டில் எதிர்மறையான ஆற்றலுக்கு வழிவிடும். ஒரு மூலையில் முறையாக காலணிகளை அடுக்காவிட்டால் வீட்டில் பிரச்சனைதான். கவனமாக இருங்கள்.
இதையும் படிங்க: Onion juice: இந்த மாதிரி வெங்காய சாறு தேய்த்து குளியுங்கள்..நீங்கள் நினைத்து பார்த்து முடியாத அளவு முடி வளரும்
எந்த திசையில் செருப்பை வைக்க வேண்டும்?
மேற்கில் செருப்பை அடுக்கி வைத்து கொள்வது நல்லது. பயன்படாத செருப்பை பத்திரப்படுத்தாமல் உடனடியாக தூக்கி எறியுங்கள். இது வீட்டினுள் பிரச்சனை ஏற்படுவதை அதிகரிக்கும். காலணிகளை வைக்கும் ரேக்கை பூஜை அறை அல்லது சமையலறை சுவற்றின் அருகில் வைத்தல் தவறு. இதனால் நிதி பிரச்சனைகள் வரக் கூடும். மேற்கு மட்டுமே செருப்பு ரேக் வைக்க நல்ல தேர்வு. கிழக்கு, வடக்கு அல்லது, தென்கிழக்கு, வடகிழக்கு ஆகிய திசைகளில் செருப்பு ரேக்கை வைக்க வேண்டாம். வடமேற்கு அல்லது தென்மேற்கு ஆகிய திசைகளில் செருப்பு ரேக்கை வைப்பது ஓரளவு நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: ’கணுப்பிடி' எப்போது வைக்க வேண்டும்? அண்ணன், தம்பி நலம் பெருக வழிபடும் பெண்களின் கவனத்திற்கு..