வாயு தொல்லைக்கு நொடிகளில் தீர்வு! பண்டிகை கால அஜீரண கோளாறு நீங்க இதை சாப்பிட்டா போதும்..

By Pani MonishaFirst Published Jan 17, 2023, 10:47 AM IST
Highlights

Health Benefits Of Asafoetida: பண்டிகை காலங்களில் பலருக்கும் உண்டாகும் வாயு தொல்லை, அஜீரண கோளாறை சரி செய்யும் பெருங்காயம் குறித்து இங்கு காணலாம். 

பெரும்பாலான பெண்கள் சமைக்கும் போது பெருங்காயத்தை பயன்படுத்தும் பழக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். உணவுகளில் சுவையூட்டுவதற்கு இதை பயன்படுத்துவார்கள். இது ஈரான், ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது இந்தியாவிலும் முக்கியமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பளபளக்கும் பிசின் துண்டுகள் போல் இருக்கும் பெருங்காயம் தூள் செய்யப்பட்டும் விற்கப்படுகிறது. 

ரசம், சாம்பார், காரமான உணவுகளில் பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது. இது ஊறுகாயிலும் பயன்படுகிறது. பெருங்காயத்தை சேர்க்கும்போது உணவில் புரதச்சத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். 

1. அஜீரண கோளாறை சரி செய்து செரிமானத்திற்கு உதவுகிறது. நம் உடலில் தேங்கியுள்ள வாயுவை அகற்றும். குறிப்பாக குழந்தைகளுக்கு வாயுவை குறைக்கிறது. 

2. ஜலதோஷம், ஒவ்வாமையாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவுகிறது. உடலில் இயற்கையான ஆன்டிபாடிகளின் உற்பத்தியைத் தூண்டும். இது சுவாசத்தை எளிதாக்கவும் உதவுகிறது. 

3. இரத்தத்தில் உள்ள பி.எச் (PH) அளவை சீராக்குவதன் மூலம் மனித உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. 

4. இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு, ஆக்ஸிஜனேற்ற பண்பு ஆகியவை வயிற்று வலி, குடல் பிரச்சனை, வாயு, குடல் எரிச்சல் நோய்க்குறிகளை நீக்க உதவும். 

5. மாதவிடாய் வலியை நீக்குகிறது. ஏனெனில் இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் மாதவிடாய் பிடிப்புகள், ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகியவற்றிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்கிறது. ஒரு கப் மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அருந்தி குணம் பெறுங்கள். வெள்ளைப்படுதல் மற்றும் பிறப்புறுப்பு தொற்று ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கும். 

இதையும் படிங்க: உச்சக்கட்டத்தை நெருங்கவிடாத விறைப்புத்தன்மை பிரச்சனையா? காரணமும் தீர்வும்

6. சளி, இருமல் ஆகியவற்றை இயற்கையாகவே விடுவிக்க உதவுகிறது. வறட்டு இருமல், கக்குவான் இருமல், மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றிலிருந்து விடுபட, தேன் மற்றும் இஞ்சியுடன் பெருங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 

7. மாதவிடாய் வலி, பல் வலி, ஒற்றைத் தலைவலி, தலைவலி தொடர்பான வலியை எதிர்த்துப் போராடுவதற்கு பெருங்காயம் உதவுகிறது. 

வீட்டு வைத்தியம்

திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, இந்துப்பு போன்றவை ஒவ்வொன்றும் 10 கிராம் எடுத்து அதனுடன் இரண்டரை கிராம் பெருங்காயத்தையும் போட்டு தூளாக்கி கொள்ளுங்கள். இந்த பொடியை சாதத்தில் பிசைந்து அதை முதல் உருண்டை உணவாக தினமும் சாப்பிடுங்கள். அதன் பிறகு வழக்கமான உணவை சாப்பிட்டால், செரிமான கோளாறு, குடல் புண் ஆகிய வாயு தொடர்பான நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். 

இதையும் படிங்க: vastu tips: வீட்டின் இந்த திசையில் செருப்பு வெச்சிருந்தா... பிரச்சனை அதிகமா இருக்கும் உடனே மாத்துங்க!

உண்மையில் பெருங்காயம் வலி நிவாரணி கலவைகள் நிறைந்தது. நம் உடலில் உள்ள வலியை நீக்குகிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் பொடியை கலந்து அருந்தினால் தலைவலி, ஒற்றைத் தலைவலியை குணமாக்கும். பல்வலியால் உண்டாகும் வலிக்கு எலுமிச்சை சாறுடன், பெருங்காயத்தை பேஸ்ட் செய்து, வலியுள்ள இடத்தில் தடவவும். இந்த டிப்ஸை பயன்படுத்தி வலியில் இருந்து விடுதலை பெறுங்கள். 

click me!