புனித நீர்... புனித தீர்த்தம்... தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Dec 28, 2017, 07:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
புனித நீர்... புனித தீர்த்தம்... தண்ணீருக்கு சூத்திரம் எழுதியது யார் தெரியுமா?

சுருக்கம்

who gives the formula of water as h2o

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களை நம் நாட்டின் பண்டைய மரபில் வகுத்து வைத்திருக்கிறார்கள். உலகம் மட்டுமல்ல, இந்த உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது என்பது முன்னோர் வகுத்த கோட்பாடு. 

உடலில் பெரும்பகுதி நீரால் ஆனது. உடலுக்குள் வாயு உள்ளது. உடலில் அக்னி அமிலமாக எரிகிறது. வாய் திறந்தால் ஆகாய வெளி. ஆனாலும் நீருக்குத்தான் பெரு மதிப்பு. தாகத்தால் உடலில் நீர்ச்சத்து குறையும் போது, நீர் குடித்தால் அது சமன் படுகிறது. இப்படி உடலுக்குள் நீர் மிகுந்திருந்தாலும், நீருக்குள்ளும் நெருப்பு உண்டு என்பது நம் பண்டைய தத்துவம். சித்த ஆயுர்வேதங்கள் கூட இதைக் கொண்டே உடல் நோய்களைக் குணப்படுத்துவதில், மருந்துகளைக் கொடுத்திருக்கின்றன.

நீர் மூலக்கூறுகளைப் பிரித்தால் அதில் நெருப்பு உண்டாகும் ஹைட்ரஜன் தெரிகிறது. நெருப்பு குளிர்ந்து நீராகிறது. ஆனால், இன்று நாம் தண்ணீரின் மூலக்கூறாக நவீன அறிவியலில் படிப்பது,  H2O என்பது. அதாவது இந்த சூத்திரத்தின் படி,  ஹைட்ரஜன் இரண்டு மடங்கும், ஆக்ஸிஜன் ஒரு மடங்கும் கொண்ட கூட்டுப்பொருள்தான் நீர் என்பது. 

இப்படி நீரின் மூலக்கூறைக் கண்டுபிடித்தது இன்றைய நவீன விஞ்ஞானம் என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தக் கலவை குறித்து நம் பண்டைய ஞானப் பொக்கிஷமான அதர்வண வேதத்தில் இந்த சூத்திரம் எடுத்தாளப் பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை. 

அதர்வண வேதத்தின் ஒரு சுலோகத்தில் இவ்வாறு கூறப்படுகிறது... ‘பிராணம் ஏகம் அன்யத்வே' என்று! அதாவது, ‘பிராணம்' என்றால் பிராண வாயு. அதாவது ஆக்சிஜன். ‘ஏகம்' என்றால்  ஒன்று.  ‘அன்ய' என்றால் வேறு ஒன்று. ‘த்வே' என்றால் இரண்டு. அதாவது தண்ணீரில் பிராண வாயு ஒரு பங்கும், வேறொரு வாயு இரு பங்கும் உள்ளது என்பதை இந்த சூத்திரம் வெளிப்படுத்துகிறது.   

ஆனாலும் இன்று நாம் பள்ளிகளில் படிக்கும் நவீனக் கல்வி முறையில், இந்த சூத்திரத்தை நாம் எழுதிப் படிப்பதையே நவீனக் கண்டுபிடிப்பு என்று கருதிப் படித்து வருகிறோம். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!