
பணம் இல்லை என்றால்,வாழ்வில் ஒன்றும் இல்லை என்பதை நாம் புரிந்து வைத்துள்ளோம் அல்லவா..?அந்த பணத்தை எப்படி பெறுவது... பணம் என சொல்லப்படும் செல்வத்தை எப்படி குறையாமல் பேணிக்காப்பது,எப்போதுமே நம் வீட்டில் தொடர்ந்து செல்வம் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பணத்திற்கும் பிரியா விடை கொடுங்க...
பணத்தை பிறருக்கு கொடுக்கும் போது, தலைபகுதியை நம் பக்கம் இருக்கும் படி வைத்து கொடுக்க வேண்டும்.
நாம் தினமும் பயன்படுத்தும்,பர்ஸ்,பீரோ உள்ளிட்ட அனைத்து இடத்திலும் பணம் எப்போதுமே வைத்திருக்க வேண்டும்.அதாவது கொஞ்சமாவது அதில் பணத்தை வைத்திருக்க வேண்டும்.சுத்தமாக பணமே இல்லாத பர்ஸ் வீட்டில் வைக்கக்கூடாது.
இல்லை இல்லை என்று சொல்லி வந்தால்,உண்மையில் இல்லாமலே போய் விடும்
வீட்டு வாடகை கொடுக்கும் போதும் சரி,பால் வாங்கும் போது பணத்தை கொடுக்கும் போதும், மனதில் சீக்கிரம் என்னிடம் வந்து சேர் என மனதில் நினைத்த வாறு பிரியாவிடை கொடுக்க வேண்டுமாம்.
ஒரு குறிப்பிட்ட தொகைக்கு கீழ் செல்லும் போது, முற்றிலும் செலவு செய்வது வரை காத்திருக்க கூடாது. அதாவது ஒரு குறிப்பிட்ட தொகை என்றுமே நம் கையில் வைத்திருக்க வேண்டும்.
அதே போன்று தூய்மையான இடத்தில் தான் பணமும் தங்கும்.பணத்தை வைக்கும் இடம் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும்
வேலையில் இருக்கும் போது மனமகிழ்ச்சியுடன் வேலையை செய்து, மகிழ்வான பணத்தை பெறுங்கள்.....
குபேர லிங்கம் படத்தை சர்ட் பாக்கெட்டில் கூட வைத்துக்கொள்ளலாம்
குபேர படத்தை,வியாபாரம் செய்யும் இடத்திலும்,வீடுகளிலும் வடக்கு நோக்கிய திசையில் வைத்து, வெள்ளிகிழமை தோறும் வணங்கி வந்தால் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.