
கொய்யாப்பழம் எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடிய பழமாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றன. பொதுவாக கொய்யாப்பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வெள்ளை கொய்யா, மற்றொன்று சிவப்பு கொய்யா. இவை இரண்டில் எது அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை கொய்யாப்பழம்
சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யாவின் சுவை வேறுபட்டதாக இருக்கும். மேலும் வெள்ளை கொய்யாவில் தான் அதிக அளவு சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் உள்ளன. அதுமட்டுமின்றி சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா பழத்தில் தான் அதிகமான விதைகள் இருக்கின்றது. முக்கியமாக வெள்ளை கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன.
ஆரோக்கிய நன்மைகள் :
- இதை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
- ஜீரண சக்தியை மேம்படுத்தும்
- எடை இழப்புக்கு பெரிதும் உதவும்
- சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்
- மாதவிடாய் வலியை குறைக்க உதவும்
- புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இதில் உள்ளன.
சிவப்பு கொய்யாப்பழம்
வெள்ளை கொய்யா பழத்தை விட சிவப்பு கொய்யா பழத்தில் தான் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளன. ஆனால் இதில் சர்க்கரை, வைட்டமின் சி, ஸ்டார்ச் குறைவாகவே இருக்கிறது. இது தவிர விதைகளும் வெள்ளை பழத்தை விட குறைவாகவே உள்ளன. சிவப்பு கொய்யாப்பழம் சிவப்பாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் அதிகமாக இருக்கும் கரோட்டினாய்டுகள் தான்.
ஆரோக்கிய நன்மைகள்
சிவப்பு கொய்யா பழத்தில் லைகோபீன் அதிகமாக உள்ளதால் அது உடலுக்கு நன்மை தரும் ஒரு சக்திவாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் ஆகும். மேலும் இது தான் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
எது பெஸ்ட்?
வெள்ளை கொய்யா பழத்தை விட சிவப்பு கொய்யா பழம் தான் சிறந்தது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இதில் வெள்ளை கொய்யா பழத்தை விட ஊட்டச்சத்து மதிப்புகள் அதிகமாக இருக்கிறது. அதாவது வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு கொழுப்பு அமிலங்கள், அதிகளவிலான நார்ச்சத்து சிவப்பு கொய்யாப்பழத்தில் உள்ளன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகவும் இது கருதப்படுகிறது.
ஆனாலும், சிவப்பு கொய்யாப்பழம் மற்றும் வெள்ளை கொய்யாப்பழம் இவை இரண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியமானது என்பதால், உங்களது தனிப்பட்ட உடல்நல தேவைக்கு எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பொறுத்து நீங்கள் தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.