
உங்களுக்கு அந்த இடத்துல மச்சம் இருக்கா..?இருந்தால் நீங்க தான்யா இனி....
மச்சம் என்ற வார்த்தைக்கே தனி விறுவிறுப்பு உண்டு...மச்சம் இருந்தாலே அதிர்ஷ்டசாலி தான் என்று சொல்லும் வார்த்தைகளை கேள்வி பட்டிருப்போம் அல்லவா...
அதே போன்ற மஞ்சம் இருப்பது ஒரு அழகு கூட...மேலும் மச்சம் நம் உடலில் அமைந்துள்ள இடத்தை பொருத்து என்னென்ன அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்
புருவம் – புருவத்தில் மச்சம் இருந்தால் நல்ல குணம் கொண்டவர்கள் .அதுவும் பெண்ணாக இருந்தால் நல்ல அந்தஸ்த்தில் இருப்பார்களாம்
காதில் மச்சம் – காதில் மச்சம் இருந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆண்வாரிசு கிடைக்குமாம்
நெற்றி – புகழின் உச்சிக்கே செல்வாள்
மூக்கில் மச்சம் – எந்த சவாலையும் எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவாள்
உதட்டில் மச்சம் – சாந்த குணம் கொண்ட பெண்ணாக திகழ்வாள,உயரிய அந்தஸ்தில் வாழ்பவளாக இருப்பாள்.சரஸ்வதி கடாட்சமாக அந்த பெண் திகழ்வாள்
கழுத்தில் மச்சம் – சந்ததி விருத்தி பெரும்
மார்பில் மச்சம் – தாம்பத்யம் சிறந்து விளங்கும்
நாக்கில் மச்சம் – பொய் சொல்லுதலின் வெளிப்பாடு
தாடையில் மச்சம் – உயர்ந்த அந்தஸ்து பெற்று சிறந்து விளங்குவார்
உள்ளங்கையில் மச்சம் – தாம்பத்தியத்தில் வாழ்கை குறைவாம்
முதுகில் மச்சம் – அனைத்திலுமே அதிர்ஷ்டம்
தொப்புளில் மச்சம் – சந்ததி மேன்மை அடையும்
வலது தொடை மச்சம்- வாழ்வில் உயர்வு
இடது தொடை மச்சம் – துரதர்ஷ்டம்
வலது முழங்கால் – தீர்த்த யாத்திரை மேற்கொள்பவர்களாக இருப்பார்கள்
இடது முழங்கால் – இறை நம்பிக்கை அதிகம் இருக்குமாம் .
பாதத்தில் மச்சம் - ஆச்சார அனுஷ்டானம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
இவை அனைத்தும் நம் உடலில் மச்சம் எங்கு உள்ளது என்பதை பொருத்து பல ஆண்டு காலமாக சொல்லப்பட்டு வருகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.