Makar Sankranti 2023: மகர சங்கராந்தி அன்று மராத்தி மொழி பேசுபவர்கள் கருப்பு ஆடை அணிவதன் காரணத்தை இத்தொகுப்பில் காணலாம்.
நாடு முழுவதும் வரும் ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் மகர சங்கராந்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் பொங்கல் என அழைக்கப்படும் விழாவை தான் வடமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மகர சங்கராந்தி என கொண்டாடுகிறார்கள். பொதுவாக இந்து மதத்தில் மங்கள காரியங்களில் கருப்பு உடைகள் பயன்படுத்தப்படுவதில்லை. அசுபமான நிறமாக கருதப்படும் இந்த நிறத்தில், மகர சங்கராந்தி அன்று மராத்தி மொழி பேசுபவர்கள் ஆடை அணிகிறார்கள்.
ஏன் கருப்பு ஆடை?
தை மாதம் பிறக்கும்போது தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியன் பிரவேசமாகும். இந்த நாள் மக்களுக்கு அருளும் ஆசியும் கொடுப்பதால் அன்றைய தினம் மகர சங்கராந்தி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த தினத்தில் மகாராஷ்டிராவில், கருப்பு நிற ஆடைகளை மக்கள் அணிவார்கள். சில பழமைவாதிகள் கருப்பு எள்ளை மனதில் கொண்டு கருப்பு ஆடைகளை உடுத்துவார்களாம். வேறு சிலர் குளிர்ச்சியைத் தவிர்க்க கருப்பு ஆடைகளை அணிவார்களாம்.
ஜனவரியில் குளிர்காலம் குறைந்து இலையுதிர் காலம் தொடங்கும். கருப்பு நிறம் தான் நம் உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது. இதுவே மராத்தி மக்கள் மகர சங்கிராந்தியில் கருப்பு உடை அணிய காரணம். பெண்கள் மகர சங்கராந்தியன்று சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் கனமான பார்டர் கொண்ட கருப்பு புடவையை உடுத்துகிறார்கள். மேலும், மகாராஷ்டிராவில் மகர சங்கிராந்தியில் வெல்லம், கருப்பு எள் ஆகிவற்றை கொண்டு லட்டு போன்ற இனிப்பு பண்டம் செய்து உண்கிறார்கள். வீட்டு மாடிகளில் பட்டம் பறக்கவிட்டும் அந்த நாளை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
இதையும் படிங்க; Vastu Shastra for home: வீட்டில் கெட்ட சக்திகள் ஆதிக்கமா? உடனே விரட்டியடிக்க வாஸ்துபடி இதை பண்ணுங்க!