பெண்கள் மெஹந்தியை விரும்பி வைத்துக் கொள்வதற்கு இது தான் காரணமா?

Published : Mar 01, 2025, 09:32 PM IST
பெண்கள் மெஹந்தியை விரும்பி வைத்துக் கொள்வதற்கு இது தான் காரணமா?

சுருக்கம்

 பெண்கள் பலருக்கும் பண்டிகை காலம், விசேஷங்கள் வந்து விட்டாலே வித விதமாக மெஹந்தி வைத்துக் கொள்வது மிகவும் பிடித்தமான ஒன்று. இது வெறும் கைகளின் அழகிற்காக வைக்கப்படுகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்தால் அசந்து போய் விடுவீர்கள். 

மெஹந்தி அல்லது மருதாணி என்பது இந்தியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் நீண்ட காலமாக மருத்துவப் பயன்களுக்காகவும், அழகு சாதனமாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சக்திவாய்ந்த மூலிகை ஆகும். அதன் இயற்கையான குளிர்ச்சி தன்மை, கிருமி எதிர்ப்பு பண்பு மற்றும் பொடுகு நீக்கும் திறன் இதை ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாக  வைத்துள்ளது.  வெறும் அழகிற்கு என நினைத்து பெண்கள் பலரும் வைத்துக் கொள்ளும் மெஹந்தி அல்லது மருதாணியானது தோல் ஆரோக்கியம், முடி வளர்ச்சி, உடல் சூட்டைத் தணித்தல், நகங்கள் மற்றும் பற்கள் பராமரிப்பு, கீழ்வாத நிவாரணம், மற்றும் குரல் பாதுகாப்பு போன்றவற்றிற்கு எப்படி பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மெஹந்தி பயன்கள் :

1. தோல் ஆரோக்கியத்துக்கு மெஹந்தி :

மெஹந்தியில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஃபங்கல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் உள்ளன. இதனால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க இது உதவுகிறது.  அடிக்கடி கைகளில் மெஹந்தி வைத்து வருவதால் எக்ஸிமா (Eczema), சொறி, அழற்சி போன்ற தோல் பிரச்சினைகள் குறையும்.
சிறு வெட்டுகள், காயங்கள், மற்றும் அழற்சிகளை தணிக்கும். முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. மெஹந்தி பொடியை தண்ணீரில் கரைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி,. 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் தோல் பிரச்சினைகள் குறையும்.

2. முடி வளர்ச்சிக்கு மெஹந்தி :

மெஹந்தி தலைக்கு ஆழமான ஊட்டச்சத்து அளித்து, முடி உதிர்வை குறைத்து, பொடுகை நீக்க உதவுகிறது. தலைமுடியின் இயற்கையான நிறத்தை பாதுகாக்க முடியும். பொடுகு  மற்றும் சொறிவீக்கம் (Scalp Infections) குறையும். முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. தலைமுடிக்கு இயற்கையான மென்மை மற்றும் மினுமினுப்பு கிடைக்கும். மெஹந்தி பொடியை தயிர் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து, 2 மணி நேரம் ஊற வைத்து தலைக்கு பூசுங்கள். பிறகு தண்ணீரால் கழுவவும்.

3. உடல் சூட்டை தணிக்க :

மெஹந்தி உடலுக்கு இயற்கையாகவே குளிர்ச்சி தரக்கூடியது. வெப்பக்காய்ச்சல், தலைவலி, மற்றும் உடல் சூட்டை குறைக்க இதை பயன்படுத்தலாம்.
வெப்பக் காய்ச்சலால் ஏற்படும் தசை வலி மற்றும் உடல் சோர்வு குறையும். கை மற்றும் காலில் அதிக வெப்பம் இருந்தால், மெஹந்தி பூசினால் குளிர்ச்சி கிடைக்கும். மெஹந்தி இலைகளை அரைத்து, அதனை பாதத்திலும், கை விரல்களிலும் பூசினால் உடல் வெப்பம் தணியும்.

தினமும் உடற்பயிற்சி செய்தும் எடை குறையலியா? அப்போ இது தான் காரணம்

4. நகங்களுக்கான பாதுகாப்பு :

மெஹந்தி நகங்களை உறுதியாகவும், அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது. பழைய காலங்களில் பெண்கள் நகங்களை மெஹந்தியால் பூசி பாதுகாத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. நகங்களின் பிளவு ஏற்படாமல் தடுக்கும். பாக்டீரியாக்கள் மற்றும் ஃபங்கஸ் தொற்றாமல் பாதுகாக்கும். இயற்கையான பளபளப்பு தரும்.  மெஹந்தி பொடியை தண்ணீரில் கலக்கி, நகங்களில் தடவினால் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

5. கீழ்வாதம் (Arthritis) மற்றும் மூட்டு வலிக்கு நிவாரணம் : 

மெஹந்தி ஒரு சிறந்த ஆயுர்வேத மருந்தாக கருதப்படுகிறது. இது கீழ்வாதம், மூட்டு வலி மற்றும் மூட்டுச்சிதைவு (Osteoarthritis) போன்ற பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. மெஹந்தி, மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது. வீக்கம் மற்றும் வலியை குறைக்கும் ஆன்டி-இன்ஃபிளமேட்டரி (Anti-inflammatory) தன்மை கொண்டது. வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு இயற்கை வைத்தியம். மெஹந்தி இலைகளை எண்ணெயில் (கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்) போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை வலிக்கும் இடத்தில் தடவலாம்.

6. குரல் பாதுகாப்பு :

மெஹந்தி வாய் மற்றும் தொண்டை கோளாறுகளுக்கும் சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது. தொண்டை வலி மற்றும் தொண்டை அழற்சி (Sore Throat) குறைக்கும். வாயின் கெட்ட நாற்றத்தை அகற்றும். பல் சிதைவை தடுக்கிறது. மெஹந்தி இலைகளை தண்ணீரில் காய்ச்சி, அந்த தண்ணீரால் வாய் கொப்பளிக்கலாம். இது தொண்டை அழற்சியை குறைக்கும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்