நெய்யுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் மாரடைப்பு குட்பை..!! புற்றுநோய்க்கு பை பை..!!

By Dinesh TG  |  First Published Sep 7, 2022, 10:39 PM IST

நமது பண்டைய உணவு அடையாளத்தோடு தொடர்புடைய பொருள் தான் நெய். பாலில் இருந்து வெண்ணெய்யை பிரித்தெடுத்து அதன்மூலம் நெய் பெறப்படுகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நெய் முக்கியத்துவம் பெறுகிறது. உணவுக்கு மட்டுமின்றி வழிபாடு, மருந்து மற்றும் தீயின் ஆற்றலை தக்கவைக்கவும் நெய்யின் பயன்பாடு இன்றியமையாததாக திகழ்கிறது. இதை சமையலில் சேர்க்கும் போது, உணவு மிகவும் சுவை பெறுகிறது. இனிப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு என எந்தவித உணவுக்கும் நெய் சுவையூட்டியாக இருக்கும். அதேபோல உடல் ஆரோக்கியத்துக்காக நெய்யை பயன்படுத்தும் போது, பல்வேறு மருத்துவ நலன்கள் ஏற்படுகின்றன. 
 


மஞ்சளுடன்...

இந்திய உணவு சார்ந்த சமையலில் மஞ்சளின் பயன்பாடு முக்கியமானது. குறிப்பாக தென்னிந்தியாவில் இதனுடைய பயன்பாடு பல்வேறு பண்பாட்டுடன் தொடர்புடையதாக உள்ளது. மஞ்சளில் இயற்கையாக இருக்கும் குர்குமின் ஒரு பைட்டோ கெமிக்கலாகும். இதற்கு மூட்டு வலியை எதிர்க்கும் ஆற்றல் உண்டு. மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு மற்றும் அழற்சியுடன் எதிர்த்து போராடும் வல்லமை உள்ளது. இவ்வாறான பல்வேறு நன்மைகளை கொண்ட மஞ்சளை நெய்யுடன் சேர்த்து சாப்பிடும் போது, உடல்நலம் மேம்படுகிறது. உடலில் அசதியினால் ஏற்படும் வலி மற்றும் காலில் ஏற்படும் வீக்கங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Latest Videos

துளசியுடன்

இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவ பயன்பாட்டுக்கு துளசி பெரும் பயனை தந்து வருகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற ஊட்டச்சத்து மனித உடலுக்கு பல்வேறு வகைகளில் பயன் தருகின்றன. மேலும் பொட்டாஸியம், இரும்புச்சத்து மற்றும் கால்சீயம் போன்ற அடிப்படைச் சத்துகளும் நிறையவே துளசியில் இடம்பெற்றுள்ளன. துளிசிச் செடியில் இருந்து இரண்டு மூன்று இலைகளை பறித்து, அதை கொதிக்கும் நீரில் போட்டுவிட்டு, அதனுடன் நெய்யை சிறிதளவு விட்டு கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. சூடான உடலமைப்பை கொண்டவர்களுக்கு, இது சிறப்பாக பயனளிக்கும். அதேபோல வாரமிருமுறை இதை குடிந்துவந்தால் சளி தொந்தரவு குறையும் மற்றும் மலச்சிக்கல் நீங்கும்.

பட்டையுடன்

ஊண் உணவுகளுக்கு பட்டையில்லாமல் வேலை நடக்காது. ஒரு குழிக் கரண்டி எண்ணெய்யுடன் பட்டை, பெருஞ்சீரகம், இலவங்கம் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து செய்யப்படும் எந்த உணவும் அடுத்த வீதி வரை மணக்கும். வெறும் உணவுக்காக சுவையூட்டியாக மட்டுமில்லாமல், மருத்துவத் தேவைக்கும் பட்டை பல்வேறு பலன்களை தந்து வருகிறது. இதிலிருக்கும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் காரணமாக பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கொதிக்கும் நீரில் பட்டையைப் போட்டு, அதில் நெய்யையும் கலந்து குடித்தால் இன்சூலின் எதிர்ப்பைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறையும் என்று நிரூப்பிக்கப்பட்டுள்ளது. 

தினசரி சாப்பிடும் உணவு மூலமாகவும் ஒவ்வாமை ஏற்படலாம்- உங்களுக்கு தெரியுமா?

பூண்டுடன்

நெய்யும் பூண்டும் சேர்த்து சமைக்க்படும் உணவுகளுக்கு தனி ருசியுண்டு. சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வித உணவுகளுக்கும் இது பொருந்தும். இதன்மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு அளப்பரியதாகும். இதய ஆரோக்கியம், சருமம் சுத்தம் மேம்படும். பொரித்த நெய்யும் பூண்டும் ரத்தம் அழுத்தத்தை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கற்பூரத்துடன் 

பட்டையில் இருந்து கிடைக்கும் கற்பூரத்துக்கு செரிமானக் கோளாறை சரிசெய்யும் சக்தியுண்டு. முடக்குவாத நோய்க்கு கற்பூரத்தின் பயன்பாடு பெரும் பலனாக உள்ளது. ஒரு தேக்கரண்டி நெய்யை அடுப்பில் நன்றாக இளக வேக வைத்து, அதில் இரண்டு துகள் கற்பூரத்தை போட வேண்டும். அதனுடன் 5 நிமிடம் வரை சூடேற்றிவிட வேண்டும். அதை அப்படியே குளிரவைத்து, காற்று உள்நுழையாக குப்பியில் வைத்து சேகரிக்க வேண்டும். அதை நீங்கள் வலியுள்ள இடத்தில் தடவி வந்தால், மூட்டு வேதனை உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும். எலும்பு பிடிமானம் கொண்ட பகுதிகளில் இதை தேய்க்கும் போது நல்ல பலன் கிடைக்கும். 

click me!