தினசரி சாப்பிடும் உணவு மூலமாகவும் ஒவ்வாமை ஏற்படலாம்- உங்களுக்கு தெரியுமா?
பெரும்பாலும் வெளியில் சாப்பிடும் உணவுகளால் ஒவ்வாமை ஏற்பட்டு, உடல்நலத்துக்கு கேடு வருவதாக நம்மில் பலர் எண்ணுவதுண்டு. ஆனால் வீட்டில் சமைக்கப்படும் தினசரி உணவுகள் வாயிலாகவும் ஒவ்வாமை ஏற்படக்கூடும் என்பது உங்களுக்கு தெரியுமா? அன்றாட தேவைக்கு தான் உணவு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஒரு சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளும் போது, உணவுக் குழாய் மண்டலத்துக்குள் திடீர் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறன. எந்த உணவும் ஒவ்வாமை தராது என்ற நினைப்பவர்களுக்குக் கூட, குறிப்பிட்ட உணவால் புதிய ஒவ்வாமை உருவாகக்கூடும் என்பது தான் நிதர்சனம்.
பசும்பால்
பால் குடித்த பிறகு உங்களுக்கு ஏதாவது அசவுகரியம் ஏற்படுவது போல இருக்கிறதா? அப்படியானால் உங்களுடைய உடல் லாக்டோஸை ஏற்க மறுக்கிறது என்று பொருள். பாலில் இருக்கும் லாக்டோஸ் என்கிற பொருள், பாலுக்கு இனிப்பான சுவையை வழங்குகிறது. பாக்கெட் செய்யப்பட்ட பாலை விடவும், பசும்பாலில் லாக்டோஸ் அதிகளவில் இடம்பெற்றிருக்கும். இதுபோன்ற அசவுகரியம் ஏற்படுபவர்களுக்கு, பால் மட்டுமில்லாமல், பாலில் சமைக்கப்பட்ட எந்த பொருளும் உடல்நலப் பிரச்னையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். 3 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மற்றும் பள்ளிச் செல்லும் குழந்தைகளிடையே இந்த பிரச்னை அதிகளவில் கானப்படுகிறது.
முட்டை
உணவு சார்ந்து இயங்கும் பல்வேறு வலைதளங்கள், முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகளை வரிசைப்படுத்துகின்றன. அதன்படி 68 சதவீதக் குழந்தைகளுக்கு முட்டைகளால் ஒவ்வாமை ஏற்படுவதாக மருத்துவக் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மேலும் 16 வயது வரை முட்டை உட்கொள்ளும் ஒவ்வாமைகளால் அவர்கள் அவுதியுறுவதாக தெரியவந்துள்ளது. முட்டை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, தோல் அரிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் எழுகின்றன. வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கரு என இரண்டுக்கும் வெவ்வேறு விதமான ஒவ்வாமை சார்ந்த பிரச்னைகள் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Water Poori : தண்ணீரில் பூரி சுடலாம் வாங்க! - ஆரோக்கியமாக சாப்பிடலாம் வாங்க!
நிலக்கடலை
மற்றொரு பொதுவான மற்றும் ஆபத்தான ஒவ்வாமை வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இது வயது வந்தவர்களுக்கும் சிறியவர்கள் என இருவருக்குமே பொருந்தும். வேர்க்கடலையால் ஏற்படும் ஒவ்வாமையால் தோல் வெடிப்பு, தோல் சிவப்பு நிறமாக மாறுவது, அரிப்பு மற்றும் வாயிலும் தொண்டையிலும் வீக்கம் போன்ற பிரச்னை ஏற்படுவது பொதுவான அறிகுறிகளாக உள்ளன. ஒரு சிலருக்கு குமட்டல் அல்லது வாந்தியும் ஏற்படும். இதுபோன்ற பாதிப்பைக் கொண்டவர்கள் வேர்க்கடலையில் செய்யப்படும் இனிப்பு வெண்ணெயான ‘பீநெட் பட்டர்’ என்கிற பொருளையும் சாப்பிடக் கூடாது. மிகவும் தீவிரமான ஒவ்வாமைக்கு உள்ளாகுபவர்கள் நிலக்கடலையை தவிர்ப்பது மட்டுமே சிறந்த தீர்வாக அமையும்.
குழந்தைகளுக்கு பிடித்த ''ரஷ்யன் சாலட்'' செய்வது எப்படி?
சோயா மொச்சைகள்
பல குழந்தைகளுக்கு சோயா மொச்சைகள் சாப்பிடுவதாலும் ஒவ்வாமை ஏற்படுவதாக மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஒருசில வயது வரை இதனால் ஏற்படும் ஒவ்வாமைகள் குழந்தைகள் மத்தியில் நீடிக்கின்றன. ஆனால் இதனால் வாழ்நாள் முழுவதும் ஒவ்வாமைக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. இதுபோன்ற பாதிப்புள்ளவர்களுக்கு சோயா மொச்சைகளில் இருந்து தயாரிக்கப்படும் சோயா பால், டோஃபூ உள்ளிட்ட பொருட்களாலும் ஒவ்வாமை ஏற்படும்.
கோதுமை
கோதுமையில் இடம்பெற்றுள்ள புரதச் சத்து காரணமாகவும், ஒருசிலருக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடும். கோதுமைப் பொருட்களை தொடர்ந்து உண்பது, மைதாவில் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட உணவுகளாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது. கோதுமையை குறிப்பிட்ட பதார்த்தங்களுடன் சேர்ந்து சமைக்கும் போதும் ஒவ்வாமை உருவாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி, அரிப்பு, வீக்கம் மற்றும் தோலில் தடிப்பு ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். கோதுமையால் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு செலியாக் நோய் பாதிப்பு என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. இதனால் தீவிர பாதிப்புக்குள்ளாகக் கூடிய வாய்ப்புள்ளவர்கள், கோதுமை மற்றும் பசையம் புரதத்தைக் கொண்ட பிற தனையங்களை தவரித்து விடுவது நன்மையை தரும்.