
உகாண்டா நாடு
வருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா நாடு திட்டம் வகுத்துள்ளது
ஜூலை 1 முதல் அமல்
குறிப்பிட்ட செயலிகள் அல்லது சேவைகளை பயன்படுத்துவோர் தினமும் 200 ஷில்லிங் வரி செலுத்த வேண்டும் என பிபிசி செய்தி தெரிவித்து உள்ளது
உகான்டா பாராளுமன்றத்தில் புதிய சட்டத்திற்கான ஒப்பதல் வழங்கப்பட்டதும், சட்ட குறிப்பில் கையொப்பமிடுவதாக குடியரசுத்தலைவர் முஸ்வேனி தெரிவித்துள்ளார்.
இதற்கான கட்டணம்
பேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தினமும் 200 ஷில்லிங் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
இதன் மூலம் அந்நாட்டுக்கு வருமானம் அதிகரித்தாலும், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
அதே சமயத்தில், இந்த முறை அமலுக்கு வரும் தரவையில், போலியாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
மேலும் அதிக நேரம் சமூக வலைத்தளங்களில் ஈடுபடுவதும் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.