
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டோபி பலவிதமான கேக்குகளை வடிவமைப்பதில் சிறந்தவர். இவரின் வாடிக்கையாளர் தன் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பியர். அவரின் உருவத்தை கேக்காக செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார். அவரின் உருவமும் அமெரிக்காவின் டிவி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற லேடி சூப்பர் ஸ்டார் கிம் ஹர்தாஷியன் உருவத்தை ஒத்திருந்தது. அதனால் கிம்மைப் போன்ற உருவத்துடன் கேக் செய்தார்.இருவருக்கும் உள்ள ஒற்றுமையை காட்ட இந்த கேக் உதவும் என நம்பினார்
இந்த கேக்கிற்காக ரைஸ் கிரிஸ்பிஸ், மார்ஸ்மெல்லோ -9 கிலோ சாக்லேட் 15 கிலோ பயன்படுத்துப்பட்டுள்ளது. இந்த கேக்கிற்கு கருப்பு ஐசிங் கொடுக்கப்பட்டு 2017ல் என்பிசி யூனிவர்சல் அணிந்திருந்த உடையை மாடலாக எடுத்து செய்திருந்தார்.
கேக்கிற்கான முகம் இதற்கென ஸ்பெஷலான 3டி அச்சிடும் உதவியுடன் உருவாக்கப்பட்டது. நகம், புருவம் கண்கள் கன்னமென ஒவ்வொன்றும் நுணுக்கமாக செய்துள்ளனர். வைர நகையை தவிர்த்து இந்தகேக் முழுமையும் சாப்பிடுவதற்கு ஏற்றதே.
இந்த கேக்கிற்கான செலவு 1.2 மில்லியன். வைரத்தின் செலவு தான் மிக அதிகம் இது டோபி செய்த முந்தைய கேக்கின் சாதனையை இது முறியடித்துள்ளது.
இத்தனை அலங்காரமான கேக்கை வெட்டி சாப்பிட மனசு வருமா அதனால இதோட மினியேச்சர் வெர்ஷன் செய்து அதை கட் பண்ணி ருசிபார்த்திருக்காங்க. எப்பிடியோ லவ்வர்ஸ் ஹேப்பிங்க
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.