புதிய ஆடை, வித விதமான மாடல் ட்ரெஸ் போட யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் நமக்கு பிடித்த நல்ல தரமான ஆடை வேண்டும் என்றால், நிறைய காசு வேணுமே என எண்ணி குறைந்த விலையில் தரமில்லாத ஆடையை வாங்கும் நபர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு தெரியாது.. சென்னையில் தரமான ஆடையை வாங்க...அதுவும் மிக குறைந்த விலையில் வாங்க ஒரு இடம் உள்ளது.ஆமாங்க...” பாந்தியன் ரோட்”.. சென்னை பாரீஸ் அருகில் உள்ளது பாந்தியன் சாலை. இந்த சாலையில் தாங்க எல்லா விதமான ஆடைகளும் மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது.
இந்த இடத்தில் மிக குறைந்த விலையில் தரமான ஆடை கிடைக்கும் என்பது நிறைய பெருக்கு தெரியாது.. ஆனால் கல்லூரி மாணவர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரை ஒரு குரூப் ஆப் மக்களுக்கு மட்டும் தெரியும்..அதனால் தான்.. அவர்கள் அணிந்து வரும் ஆடை தரமானதாக இருப்பதை பார்க்கும் போதே தெரியும்.
எனவே, இதுநாள் வரை இந்த செய்தி தெரியாதவர்கள், இனி ஒரு முறையாவது அங்கு சென்று பிடித்த ஆடையை பிடித்த நிறத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஆடம்பரம் மிக்க மாளிகையில் சென்று ஆடை எடுத்தால் தான் அது தரமானதாக இருக்கும் என நினைக்க வேண்டாம். சாதரணமாக பாந்தியன் ரோட்டில் உள்ள கடைகளில் எடுத்தாலே போதும். அந்த ஆடைகள் நல்ல தரமானதாகவும், அதிக நாட்கள் உழைக்க கூடியதாகவும் இருக்கும்.