Pillow Cover Stain Removal : தலையணை உறை எண்ணெய் பிசுபிசுப்பாக இருக்கும் போது அதை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக நாம் அனைவருமே சுத்தமாக இருக்க தான் விரும்புவோம். இதனால் தான் தினமும் குளிக்கிறோம் மற்றும் உடுத்தும் ஆடைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். ஏனெனில் நாம் சுத்தமாக இருந்தால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும். மேலும் நோய் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்படும்.
அந்த வகையில், நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தமாக வைத்துக் கொள்வோம். அவற்றில் ஒன்றுதான் தலையணை. இப்போது ஒரு கேள்வி என்னவென்றால் நாம் பயன்படுத்தும் தலையணையை நம்மில் எத்தனை பேர் சுத்தமாக வைத்துக் கொள்கிறோம்? ஏனெனில் நம்மில் பலர் தலையணையை பயன்படுத்துவார்கள். ஆனால், அதை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள். இன்னும் சிலருக்கோ அதை எப்படி சுத்தமாக வைப்பது என்று கூட தெரிவதில்லை.
எண்ணெய், வியர்வை, இறந்த சரும செல்கள் போன்றவை தலையணையில் ஒட்டிக் கொள்ளும். இதனால் நம்முடைய தலைமுடி தான் மோசமாக பாதிக்கப்படும். அதிலும் குறிப்பாக எண்ணெயால் தலையணை உறை ரொம்பவே பிசுபிசுப்பாக இருக்கும். மேலும் அதை சுத்தம் செய்வதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் எண்ணெய் படிந்த தலையணை உறையை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: கால்களுக்கு நடுவே தலையணை வெச்சு தூங்கினால் இத்தனை நன்மைகளா..?
சூடான நீரில் சுத்தம் செய்தல்:
தலையணை உறையில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்க வெந்நீரில் சுத்தம் செய்யலாம். இதற்கு வழியில் சூடான நீர் ஊற்றி அதில் தலையணை உறையை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள். இதனுடன் துணி துவைக்கும் லிக்விட் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு சாதாரண தண்ணீரில் அலசி வெயில் காயவைத்து பயன்படுத்தலாம்.
பேக்கிங் சோடா:
எண்ணெய் படிந்த தலையணை உறையின் மீது பேக்கிங் சோடாவை தெளிக்கவும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். பிறகு தண்ணீர் கொண்டு நன்கு அலசினால் போதும். தலையணை உறையிலிருந்து எண்ணெய் முற்றில் நீங்கிவிடும்.
குளிர்ந்த நீர்:
குளிர்ந்த நீரில் எண்ணெய் படிந்த தலையணை உறையை சுமார் 30 நிமிடம் ஊற வைக்கவும். மேலும் இதனுடன் இரண்டு துளி ஷாம்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு துணி துவைக்கும் பிரஷ் கொண்டு தலையணை உரையை மெதுவாக தேய்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தலையணை உறையில் இருக்கும் எண்ணெய் கறைகள் அகன்று விடும்.
இதையும் படிங்க: ஒருநாள் தலையணை இல்லாமல் தூங்கி பாருங்க; எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நினைவில் கொள்:
- முடிந்தவரை இரண்டு தலையணை உறைகளை பயன்படுத்துங்கள். இதனால் தலையணையில் எண்ணெய் சீக்கிரம் பிடிக்காது. அதுபோல, வெளிர் நிறங்களுக்கு பதிலாக ஆர்டர் நிற தலையணை உறையை பயன்படுத்துங்கள்.
- அதுபோல தலையணை உறையை அடிக்கடி மாற்றுங்கள்.
- துணி வகைக்கு ஏற்ப சூடான நீரில் தலையணை உறையை கழுவ வேண்டும்.
- மேலும் தலையணையை அவப்பொருள் வெயிலில் வைத்து பயன்படுத்துங்கள்.