150 ஆண்டுகள் பழமையான மரத்தில் இருந்து கொட்டும் தண்ணீர்.. அதிசய மரத்தின் வைரல் வீடியோ..

By Ramya s  |  First Published Nov 21, 2023, 5:08 PM IST

தெற்கு ஐரோப்பாவில் ஒரு விசித்திரமான மரத்தின் வீடியோ காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.


இயற்கை எப்போதும் மனிதர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த உலகில் ஏராளமான மர்மங்கள் மனிதனை வியக்க வைக்கிறது. இயற்கை ஒவ்வொரு இடத்திலும் அதிசயங்களை மறைத்து வைத்திருக்கிறது. அந்த வகையில் தெற்கு ஐரோப்பாவில் ஒரு விசித்திரமான மரத்தின் வீடியோ காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. 150 ஆண்டுகள் பழமையான மல்பெரி மரத்தில் இருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் தண்ணீர் கொட்டுகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மொண்டினீக்ரோவில் உள்ள டைனோசா கிராமத்தில் மல்பெரி மரம் காணப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது. ஆனால் ஆண்டு முழுவதும் இந்த மரத்தில் இருந்து தண்ணீர் கொட்ட்டாது எனவும், ஆண்டின்  சில நாட்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. மரத்தின் துளையிலிருந்து நீரூற்று காட்சியளிக்கிறது. சயின்ஸ் கேர்ள் என்ற ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த பதிவில் “ மாண்டினீக்ரோவில் உள்ள டைனோசா கிராமத்தில், சுமார் 150 ஆண்டுகள் பழமையான மல்பெரி மரம் உள்ளது. 1990களில் இருந்து இந்த மரத்தில் இருந்து தண்ணீர் பாய்கிறது. இது நிலத்தடி நீரோடைகளுடன் இணைகிறது, மேலும் மரத்தின் தண்டு பலத்த மழைக்குப் பிறகு உருவாகும் அழுத்தத்திற்கு நிவாரண வால்வாக செயல்படுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

There is an old mulberry tree approximately150years old in the village of Dinosa in Montenegro. This tree has been gushing water since the 1990's

It sits on underground streams and its hollows act as a relief valve for the pressure that builds up after heavy rainfall… pic.twitter.com/1IFOztmXlF

— Science girl (@gunsnrosesgirl3)

வைரலாகி வரும் அந்த வீடியோவில் மரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுவதை பார்க்க முடிகிறது. மரத்திலிருந்து இந்த நீரூற்றைக் காண பலர் இங்கு வருகிறார்கள். தரையிலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் உள்ள மரத்தில் இருந்து தண்ணீர் பாய்கிறது. உள்ளூர் வாசியான அமீர் ஹக்ரமாஜ் என்பவர் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ இந்த மரத்தின் கீழ் ஒரு நீரூற்று உள்ளது. இது மரத்தின் வெற்றுப் பகுதி வழியாக மேலே செல்கிறது. மரம், அதனால்தான் இந்த அழகான மற்றும் அரிய காட்சியைப் பெறுகிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

பாம்பு கடித்தால் உயிருக்கேஆபத்து.. ஆனால் பாம்பு விஷத்தை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

பனி உருகிய பிறகு அல்லது பலத்த மழைக்குப் பிறக நிலத்தடி நீரூற்றுகள் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. இந்த அழுத்தம் மரத்தின் வெற்றுப் பகுதி வழியாக நீர் மேலே எழுகிறது. பின்னர் அது மரத்தின் இடைவெளி வழியாக வெளியேறுகிறது என்று பிபிசி தெரிவித்துள்ளது. "இது ஒரு கண்கவர் இயற்கை நிகழ்வு!" ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை ஏற்கனவே 18 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். துருக்கியின் யகாபார்க் ட்ரௌட் பண்ணையில் உள்ள மரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் புகைப்படத்தையும் பலர் பகிர்ந்துள்ளனர். 

click me!