சாம்சங் - வோடபோன் கூட்டணி; நுகர்வோருக்கு ரூ.1500 கேஷ் பேக் சலுகை

Asianet News Tamil  
Published : Jan 06, 2018, 05:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
சாம்சங் - வோடபோன் கூட்டணி; நுகர்வோருக்கு ரூ.1500 கேஷ் பேக் சலுகை

சுருக்கம்

Vodafone announces cashback offer on select Samsung 4G smartphones

சாம்சங் மொபைல் நிறுவனம், வோடபோன் சேவை நிறுவனத்துடன் இணைந்து 4ஜி ஸ்மார்ட் போன்களுக்கு கேஷ் பேக் சலுகை வழங்குகிறது. ரூ.1500 வரை இந்த கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இது குறிப்பிட்ட சேம்சங் மாடல்களுக்கு பொருந்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

வோடபோன் சேவையை பயன்படுத்தும் புதிய, பழைய வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட சில சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கும் போது கேஷ்பேக் சலுகை வழங்கப்படுமென வோடபோன் கூறியுள்ளது. 

வோடபோன் சேவையை பயன்படுத்தும் அனைத்து பிரீபெயிட், போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த கேஷ் பேக் சலுகை வழங்கப்படும். இதற்கு, பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து 24 மாதங்களுக்கு ரூ.198க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும்.  

வோடபோன் போஸ்ட்பெயிட் சேவையை பயன்படுத்துவோர், வோடபோன் ரெட் திட்டங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். முதல் 12 மாதங்கள் நிறைவுற்றதும், வோடபோன் சார்பில் ரூ.600 கேஷ்பேக் வழங்கப்படும். அடுத்த 12 மாதங்கள் நிறைவுற்றதும் ரூ.900 கேஷ்பேக் வழங்கப்படும். 

இந்த கேஷ்பேக் சலுகையை வோடபோனின் எம்-பேசா வாலெட்டில்தான் சேர்க்கப்படும். எனவே வாடிக்கையாளர்கள் வோடபோனின் மொபைல் வாலெட் பயன்படுத்தி, முதல் 24 மாதங்களுக்கு வோடபோன் சேவையை பயன்படுத்தியாக வேண்டும்!

இந்த கேஷ்பேக் சலுகையில் சாம்சங் கேலக்ஸி ஜெ2 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.6,990 விலையில் வாங்கலாம். கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட் ரூ.8,990க்கும், கேலக்ஸி ஜெ7 மேக்ஸ் ரூ.15,400 விலையிலும் வாங்கலாம். (இவற்றின் அசல் விலை முறையே ரூ.8,490, ரூ.10,490 மற்றும் ரூ.16,900 ஆகும்)
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!