தயவு செய்து குழந்தைகள் முன் இப்படி செய்யாதீங்க...!

First Published Jan 5, 2018, 6:53 PM IST
Highlights
dont do anything in front of your children


பிள்ளைகள் வளர்ப்பில் தனி கவனம் வேண்டும் என்பதில் எந்த மாற்றும் கருத்தும் இல்லை அல்லவா...

ஆனால் நம் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச  வேண்டும்....நன்கு படிக்க பெரிய பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வம்,பிள்ளைகள் முன்பெற்றோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் இருப்பதில்லை என்றே கூறலாம்.

 

அதிலும் குறிப்பாக,பிள்ளைகள் முன் எப்படி நடந்து கொள்ள  வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்  

பிள்ளைகள் முன்னிலையிலேயே சண்டையிடுவது; பிள்ளையின் தலைமீது சத்தியம் செய் என்று வாழ்க்கைத் துணையை மிரட்டுவது- கேடுகெட்ட செயலாக பார்க்கப்படுகிறது.

பிள்ளைகள் மூலமாக ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது..

இது போன்று பல கேவலமான செயல்களில் ஈடுபடுவதால், பிள்ளைகளும் மற்றவர்களை சந்தேக குணமாகவும், வேவு பார்ப்பதும், எப்போது எதாவது குறையை சுமத்தி வருவது, மற்றவர்களிடம் குறை காண்பதுமே வேலையாக  வைத்துக் கொள்வார்கள்

தனக்கு ஒரு வேலையாக வேண்டுமென்றால், அம்மா பற்றி அப்பாவிடமும், அப்பாபற்றி அம்மாவிடம் போட்டுக்கொடுக்கவும் செய்வார்கள்.

கடைசியில் என்ன தெரியுமா மிஞ்சும் ?

பொறுப்பே இல்லாத, எதிலும் முடிவு எடுக்க முடியாத  மக்கு பிள்ளைகளாக மாறி விடுவார்கள்....அவர்கள் மீது  யாருக்கும் நம்பிக்கை இல்லாமல் போகும் .

இதனையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு,பெற்றோர்கள் எப்போதும் பிள்ளைகளை எப்படி வளர்க வேண்டும் என்பதில் மிக கவனம் செலுத்தினால், மிக சிறந்தவர்களாக வருவார்கள். 

click me!