
பேஸ்புக்கில் போலியான கணக்கை தொடங்க முடியாத அளவிற்கு தற்போது ஒரு புது ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம்
பேஸ்புக்கில் ஒரு கணக்கை தொடங்க வேண்டுமென்றால், மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி இருந்தால் போதுமானது.
இவை இரண்டையும் பயன்படுத்தி,ஏராளமான நபர்கள் போலியான பேஸ்புக் கணக்கை ஓபன் செய்து,அது மூலம் பல பிரச்சனைக்கு வழி வகுத்தனர்.
அதாவது,வேறு ஒரு பெண் போட்டோவை வைத்து,ஆண் நபர் ஒருவர் பல பெண்களுடன் நட்பாக பழகி காதலாகி மாறி, பல குற்ற சம்பவங்கள் முதல் மார்பிங் செய்வது வரையிலும்,
தீவிரவாதம் முதற்கொண்டு அனைத்திற்கும் வழி வகுத்து வந்தது சமூகவலைத்தளங்கள்
இந்நிலையில்,போலி கணக்குகளை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை கொண்டு வந்துள்ளது பேஸ்புக்.
அதாவது ஒரு கணக்கை துவங்கும் போது போலியான வேறொரு புகை படத்தை அப்லோட் செய்தால்,அது தானாகவே டேக் செய்து காட்டும்.
அதாவது,அந்த புகைப்படம் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் பட்சத்தில் அந்த புகைப்படம் யாருடையது மற்றும் அந்த புகைப்படத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை மிக எளிதில் கண்டறிய முடியும்.
பின்னர் புகார் தெரிவித்தால் அந்த போலி கணக்கு உடனடியாக முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.