
இயற்கை சீற்றங்கள் அதிகரிக்குமா?
பெருகி வரும் செயற்கையால், இயற்கை பெருமளவு பாதித்து உள்ள இந்த உலகில், இந்த ஆண்டு 2018 இல்,இயற்கை சீற்றங்கள் வருமா என்ற கேள்விக்கு "கண்டிப்பாக வரும்" என தேவராஜ் சுவாமிகள் கருத்து தெரிவித்து உள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏதோ ஒரு இடத்தில் கண்டிப்பாக இயற்கை சீற்றங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.அதனால் மக்கள் பல பாதிப்புகளை சந்தித்து தான் வருகின்றனர்.
குறிப்பாக சென்னையை பொறுத்தவரை, என்ன நடக்குமோ என்ற பயம் எப்போதுமே மேலோங்கி இருக்கும்.
அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூட,பெரிய அளவில் இயற்கை சீற்றம் இல்லை என்றாலும்,தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை பலரும் மரணம் தழுவினர்.இது இயற்கை இல்லை என்றாலும், ஏதோ ஒரு வகையில் மனித குலத்திற்கு பெரும் தீங்காக மாறி விடுகிறது.
அந்த வகையில், 2018 ஆம் ஆண்டு மக்களுக்கு எப்படியெல்லாம் சாதகமா இருக்கும், என்னென்ன நடக்கலாம் என்பதை பற்றி தேவராஜ் சுவாமிகள் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பார்கலாம்
2018 -சந்திரன் ஆதிக்கம்
உலக சீற்றங்கள்,இயற்கை சீற்றங்கள் வருமா என்ற கேள்விக்கு..'கண்டிப்பாக வரும்" என தெரிவித்து உள்ளார்.
அதுவும் மனித இனத்திற்கு பேரழிவு இருக்கும் என்றும், ஆனால் எந்த நாடு எந்த திசை என சொல்வதை விட, ஆபத்து இருக்கிறது என்று பொதுவாக சொல்லி உள்ளார்
அது சுனாமியா, பூகம்பம் வருமா என நினைத்து பயம் வேண்டாம்...என்றும்,"prayers bring victory"என சொல்வதற்கு இணக்கமாக,குல தெய்வ வழிபாடு தேவை...என்று கூறுகிறார்.
உலக மக்களுக்காகவும்,தன் மக்களுக்காகவும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க ஒரு நாளைக்கு ஐந்து நிமிடமாவது வழிபாடு செய்வது நல்லதுக்கு வழி வகுக்கும்.
மேலும்,பெண்களுக்கு ஒரு இடர்பாடான ஆண்டாக கூட இந்த ஆண்டு அமையும் என தெரிவித்து உள்ளார்
இது சித்தர் வாக்கு..கண்டிப்பாக நடக்கும் என தேவராஜ் சுவாமிகள்,கடைசியாக தெரிவித்து, தன் உரையை முடித்துகொண்டார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.