சமீபத்தில், சிங்கம் ஒன்று, ஒரு மரத்தின் பச்சை இலைகளை மென்று உண்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் கணிக்க முடியாத இடங்களை பற்றி பேசினால் அதில் காடுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நினைவுக்கு வரும். சிங்கங்கள் மற்றும் புலிகள் காடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும் இந்த விலங்குகள் மாமிச உண்ணிகளாக கருதப்படுகின்றது. புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று ஒரு பழமொழி கூட நமக்கு நினைவுக்கு வரும். எனவே காட்டில் உள்ள சிங்கம், புலி போன்ற விலங்குகள் பசிக்கும் போது கண்ணில் எதிர்ப்படும் உயிரினங்கள், அவை விலங்குகளாக இருந்தாலு சரி, மனிதர்களாக இருந்தாலும் சரி, அவர்களை துரத்தி மூர்க்கத்துடன் தாக்கி அவர்களை கொல்கின்றன.
ஆனால் ஒரு சிங்கம் மாமிசங்களை தவிர்த்து செடி கொடிகளை உண்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். அது உண்மை தான். சமீபத்தில், சிங்கம் ஒன்று, ஒரு மரத்தின் பச்சை இலைகளை மென்று உண்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
காட்டின் ராஜாவாக கருதப்படும் சிங்கத்திற்கும் பச்சைக் காய்கறிகளின் நன்மைகள் தெரியும் போலும். சரி அந்த வீடியோவில் என்ன இருக்கிறது? வைரலான வீடியோவில், ஒரு சிங்கம் ஒரு மரக்கிளையை நோக்கி தனது சக்திவாய்ந்த பாதங்களை நீட்டி அதன் தாடை வலிமையுடன், மரத்தின் இலைகளை சாமர்த்தியமாக பறித்து, மகிழ்ச்சியுடன் அவற்றை அனுபவிக்கிறது. அதை பார்த்த நெட்டிசன்கள் இதுகுறித்த தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சிங்கம் கொஞ்ச நேரம் வெஜிடேரியனாக இருக்க விரும்பியது என்று நினைக்கிறேன் என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், சிங்கத்தை பற்றிய இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். வேறொரு பயனர், சிங்கம் புல் உண்ணாது என்ற கருத்தை தான் மாற்றிக்கொண்டதாக பதிவிட்டுள்ளார்.