இதுதாங்க தாய் அன்பு! மருத்துவமனையில் தாய்...பசிக்கு அழுத குழந்தை... தாய்ப்பால் கொடுத்த கேரள போலீஸ்!

Published : Nov 24, 2023, 04:49 PM ISTUpdated : Nov 24, 2023, 05:17 PM IST
இதுதாங்க தாய் அன்பு! மருத்துவமனையில் தாய்...பசிக்கு அழுத குழந்தை... தாய்ப்பால் கொடுத்த கேரள போலீஸ்!

சுருக்கம்

பாட்னாவை சேர்ந்த பெண்ணின் நான்கு மாதக் குழந்தைக்கு கொச்சி சிவில் போலீஸ் பெண் அதிகாரி ஒருவர் தாய்ப்பாலூட்டி கருணை காட்டியதற்காக பலரது பாராட்டை பெற்றுள்ளார்.

கொச்சி மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த சிவில் போலீஸ் அதிகாரி எம். ஏ. ஆர்யா. இவர் பாட்னாவை சேர்ந்த பெண்ணின் நான்கு மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினார். இவருக்கு 9 மாத குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாட்னாவில் வசிக்கும் குழந்தையின் தாய், சிகிச்சைக்காக எர்ணாகுளம் பொது மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். இந்த குடும்பம் கேரளாவில் சிறிது காலமாக வசித்து வருவதாகவும், தந்தை ஒரு வழக்குக்காக சிறையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஸ்டேஷனில் இருந்த போலீஸ் ஊழியர்கள் மற்ற மூன்று குழந்தைகளுக்கு உணவு வழங்கினர், அவர்களை பராமரிக்க யாரும் இல்லாமல் இருந்தனர். ஆனால், ஆர்யா ஒரு படி மேலே சென்று அழுது கொண்டிருந்த குழந்தையை ஆற்றுப்படுத்த தன் தாய்ப்பாலைக் கொடுத்தார்.

இதையும் படிங்க:   தாய்ப்பால் கொடுக்கும் பெண்களே!..தவறுதலாக கூட இவற்றை சாப்பிடாதீங்க...குழந்தைக்கு ஆபத்து.. ஜாக்கிரதை..!!

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆர்யாவின் சைகையைப் பாராட்டிய நகரக் காவல் துறையினர், குழந்தையைத் ஆர்யா கைகளில் பிடித்த தருணத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். மேலும், குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்ற போலீசார் ஏற்பாடு செய்தனர், அங்கு அவர்கள் சிறந்த பராமரிப்பு மற்றும் வசதிகளைப் பெற முடியும் என்று காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Rasam Recipes : ரசத்தில் '10' வகையா? வெறும் பத்து நிமிடத்தில் செய்ய ஈஸியான 'ரசம்' ரெசிபி!!
Mineral Water : மினரல் வாட்டரில் 'வெந்நீர்' போட்டு குடிக்கலாமா? அதனால் நன்மையா? தீமையா? உண்மை தகவல்