விஜய் டிவியின் எண்ட்ரிக்கு பிறகு மணிமேகலைக்கு அடித்த 'ஜாக்பார்ட்'...அடுத்த பிளான் இதுதான்!மனம் திறந்த மணிமேகலை

Anija Kannan   | Asianet News
Published : Feb 09, 2022, 11:41 AM ISTUpdated : Feb 09, 2022, 02:05 PM IST
விஜய் டிவியின் எண்ட்ரிக்கு பிறகு மணிமேகலைக்கு அடித்த 'ஜாக்பார்ட்'...அடுத்த பிளான் இதுதான்!மனம் திறந்த மணிமேகலை

சுருக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின், மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவோர் தான் மணிமேகலை.

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பேராதரவு பெற்று விடுகின்றன. 

அப்படி ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி, புகழை அடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மணிமேகலை.குறிப்பாக இவர் அடிக்கும் காமெடி அல்டிமேட், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். தனது வேடிக்கையான காமெடி கவுண்டர்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளதோடு, சமூக ஊடகத்தில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்களையும் வைத்துள்ளார் .

இவர் தன்னுடைய பயணத்தை, கடந்த 2009 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக, சன் டிவியில் ஒளிபரப்பான சன் மியூசிக்கில் துவங்கினார். அவர் தொகுத்து வழங்கிய ஃபிரியா விடு, வெட்டி பேச்சு போன்றவை  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர், மணிமேகலைக்கும், டான்ஸ் மார்ஸ்டர்  ஹூசைன் என்பவருக்குக்கும் இடையே காதல் மலர்ந்தனர். இதையடுத்து, மணிமேகலை தனது  நீண்ட நாள் காதலனான  ஹூசைன் என்பவரை பெற்றோரின் எதிர்ப்பையும்  மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.

பிறகு, வாழ்வின் கடினமாக சூழ்நிலைகளில் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் தைரியமான முடிவு எடுத்ததாக அவர் பல இண்டெர்வியூவில் தெரிவித்துள்ளார். அதுதான், அவருக்கு கிடைத்த விஜய் டிவி வாய்ப்பாகும். 

பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி ஆன மணிமேகலை’ கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவரது படபட பேச்சு ரசிகர்களுக்கு பிடித்தது. பிறகு இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை ஒரு போட்டியாளராக தன் கணவனுடன் கலந்து கொண்டார். அதில்  இவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் அதன்பிறகு மணிமேகலை விஜய் டிவியின் சிறந்த தொகுப்பாளினிகளில் ஒருவராக மாறிவிட்டார்.  

பிறகு, இவருக்கு மிக பெரிய வெற்றியை தேடி தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆகும். அத்துடன், இவர் தனது கணவர் ஹூசைனுடன் இணைந்து தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். முதல் கொரோனா லாக்டவுனில்  இவர்கள் இந்த சேனலை தொடங்கினார்கள். இதில் இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதன் மூலமும் இவர்கள் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மணிமேகலை சில மாதங்களுக்கு முன், புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கினார் இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார். பிறகு சில நாட்களிலே மற்றொரு காரும் வாங்கி அதையும் இன்ஸ்டாவில் பகிர்ந்தார். இதற்குபல்வேறு  ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். 

 இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக மணிமேகலையும் ஹூசைனும் 2 ஏக்கரில் நிலம் வாங்கி இருந்தனர். இதை பற்றிய விவரத்தை சில நாட்களுக்கு முன் மணிமேகலை தனது யூடியூப் சேனலில் vlog காக வெளியிட்டுள்ளார். இதில் தற்போது வீடு கட்டும் பணியையும் அவர்கள் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கு பல்வேறு ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். நெட்டிசன்கள் சிலர், நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க என்று யூடியூபில் எவ்வளவு வருது என கேள்வி கேட்டு வருகின்றனர்.  சினிமா நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல், நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் தங்களுக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்