
சமையல் அறையை கையாளும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றி 4 டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சமையல் அறைதான் நம் வீட்டில் அதிகம் பயன்படுத்தும் இடமாகும். குடும்ப தலைவிகள் காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை அடுப்பை பற்ற வைத்து பால் காய்ச்சுவது தான். குறிப்பாக, காலையில் எழுந்து ஆஃபீஸ் ஃபோன் கால்ஸ், குழந்தைகள், குடும்ப வேலை இடையே சமையலறை என பிஸியாக இருக்கும் பெண்கள், சமையல் அறையில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். எது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் குழம்புகின்றனர். சில சமயங்களில் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளால் விபத்துகள் நேரும் வாய்ப்புகள் உள்ளன. அப்படியான, சமையல் அறையை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
உங்கள் வீட்டின் அளவு சிறியதோ, பெரியதோ அதனை நீங்கள் முறையாக பயன்படுத்த புத்திசாலித்தனமும், புதுமையான சிந்தனைகளும் தேவை. வீட்டில் உள்ள அனைவருக்கும் சுவையோடு அன்பையும் கலந்து உணவு தயாரிக்கும் சமையலறை விசாலமாகவும், சுத்தமாகவும், பயன்படுத்த எளிதானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். எனவே உங்களுடைய சமையலறையின் ஒவ்வொரு மூலை முடுக்கு உட்பட அனைத்து ஏரியாவை சரியாக பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.
ஓபன் மாடல் கிச்சன் :
கூடுமான அளவிற்கு சமையல் அறைக்கு கதவுகள், அதிகப்படியான சுவர்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அதிகப்படியான ஜன்னல்களை வைக்கலாம். இது சமையல் அறைக்கு நல்ல காற்றோட்டம், வெளிச்சம் ஆகியவற்றை கொடுப்பதோடு, சமைப்பவர்களின் மனநிலையையும் ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்.
கிச்சன் கவுன்டர் டாப்:
கிச்சன் கவுன்டர் டாப் மற்றும் சுவற்றில் உள்ள அலமாரிகளில் மிக்சர், ஜூஸர், பிளெண்டர், மைக்ரோவேவ், வெஜிடபுள் சாப்பர் போன்ற பொருட்களை வைத்திருப்பார்கள். இது கிச்சனில் பாதி இடத்தை அடைத்துக் கொள்வதோடு, சமைக்கும் போது சிரமாக இருக்கும். எனவே அடிக்கடி பயன்படுத்தக்கூடிய மிக்ஸி போன்ற சில எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை மட்டும் மேலே வைத்துக்கொண்டு, எப்போதாவது பயன்படுத்தக்கூடிய பிற பொருட்களை கீழே உள்ள ஷெல்ப்களில் அடுக்கிக் கொள்ளலாம்.
சுவற்றில் மாட்டக்கூடிய ஸ்டோரேஜ் அமைப்பு :
வால் மௌண்டிங் ஸ்டோரேஜ் எனப்படும் சுவற்றில் மாற்றக்கூடிய சேமிப்பு பெட்டிகளை பயன்படுத்தலாம். இதனை மாடுலர் கிச்சன்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. சாதாரண சமையல் அறையில் கூட வெறுமையாக உள்ள சுவற்றில் மாற்றிக்கொள்ளலாம். இது சமையலறைக்கு புது லுக்கை கொடுப்பது, நிறைய பொருட்களை சேமித்து வைக்கவும் பயன்படும்.
திறந்த நிலை அலமாரிகள் :
சமையல் அறையில் திறந்த நிலையிலான அலமாரிகளை பயன்படுத்துவது புத்திசாலித்தனமான ஒன்று. இதன் மூலம் அலமாரி அடுக்குகளில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக பார்க்கவும், எடுக்கவும் முடியும். அதுமட்டுமின்றி அலமாரிகளை கதவை அடைப்பதை விட, ஓபன் டைப் கேபினேட்களை பயன்படுத்துவதால் கிச்சனின் அளவும் பெரிதாக காட்சியளிக்கும்.
லைட் கலர் பெயிண்டிங் :
பல வீடுகளில் சமையலறை பெயிண்டிங் விஷயத்தில் எடுக்கப்படும் தவறான முடிவு, மொத்த அழகையே கெடுத்துவிடுகிறது. சமையலறைக்கு ஏற்ற தடாலடியான மாற்றம் என்பது அதன் உள்புற வண்ணத்தை மாற்றுவதாகும். அவ்வாறு வண்ணங்களை தேர்வு செய்யும்போது அடர்த்தியான நிறத்திற்கு செல்லாமல் வெளிர் வண்ணங்களை தேர்வு செய்து பூசலாம். உங்கள் சமையலறை பிரகாசமாக இருக்க வேண்டும் நினைத்தால் மஞ்சள் மற்றும் பச்சையின் பல வண்ண ஷேடுகளில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.