
பிப்ரவரி மாதம் தொடங்கி, விட்டாலே போதும். இளசுகள் மனது சிறகடித்து பறக்கும். ஒவ்வொரு நாளும் காதலிப்பவர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில், பரிசு ஒன்றை பரிமாறிக்கொள்வார்கள். இந்த நாட்களுக்காக ஏங்காத காதலர்களே கிடையாது எனலாம் . தற்போது, காதலித்துக் கொண்டிருப்பவர்கள், திருமணம் செய்த ஜோடிகள்,வயதான ஜோடிகள் என்று அனைவரும் தங்களுடைய காதலர் தின வாரத்தை சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
நாம் தினந்தேறும் நம் காதலி அல்லது காதலனிடம் அன்பை வெளிப்படுத்தினாலும் இந்த நாட்களில் காதலை வெளிப்படுத்துவது ஒரு ஸ்பெஷல் தருணமாக மறக்க முடியாத நினைவாக கொண்டாடப்படுகிறது.
உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் இருக்கும்.
ரொமான்டிக் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று பிப்ரவரி 9 -ம் தேதி சாக்லேட் தினம் ஆகும்.
காதலர் தினம் ஒவ்வொருவரது வாழ்விலும் மிகவும் மறக்க முடியாத தருணத்தை நினைவு கூறும். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் என்ற ஒன்று கடந்து சென்றிருக்கும். காதலிக்கவே இல்லை என்று சொல்பவர்கள் குறைவுதான். இந்த நாளில் நமக்கு பிடித்தமான நபர்களுக்கு பிடித்த சாக்லேட்களை அளித்து மகிழலாம். இதனால் நமது உறவு மேலும் வலுப்படும்.
பிப்ரவரி 9-ம் தேதி சாக்லேட் டே (chocolate day)
சாக்லேட்கள் உண்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதையும் தாண்டி, ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அதிக கோக்கோ நிறைந்த சாக்லேட்கள் உடலுக்கு மிகவும் நல்லது. டார்க் சாக்லேட்டில் தான் அதிக கோக்கோ இருக்கிறது.மில்க் சாக்லேட்டில் குறைந்த கோக்கோ உள்ளது. வொயிட் சாக்லேட்டில் கோக்கோர் இருக்காது. அவை பால், சர்க்கரை, கோக்கோ பட்டர் மூலம் தயாரிக்கப்படுபவை.
சாக்லெட்டில் ‘ட்ரைப்டோஃபன் ’என்கிற மூலப்பொருளை அதிகமாக கொண்டிருக்கிறது. அது நம் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய செரோடின் அமிலத்தை சுரக்கச் செய்கிறது. அதேபோல் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. அதனால்தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர். நீங்களும் உங்கள் காதலியிடமிருந்து சாக்லெட் கொடுத்து முத்தம் வாங்கிக் கொள்ளுங்கள்.
இந்த நாளில் உங்கள் காதலி அல்லது காதலனுக்கு கொடுக்க வேண்டிய பரிசுகள்:
சாக்லேட்டில் உணவு செய்து கொடுப்பது.
சாக்லேட்டில் வரைந்த ஓவியங்களை உங்கள் காதலி அல்லது காதலனுக்கு பரிசாக கொடுக்கலாம்.
சாக்லேட்டால் செய்யப்பட்ட பொம்மை பரிசு.
திருமணமான தம்பதியினர் சாக்லேட் மசாஜ் செய்யலாம்.
சாக்லேட் உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
செக்ஸ் உணர்வைத் தூண்டும்: சாக்லேட்உண்பது உங்களை மகிழ்ச்சியாகவும், ரொமான்டிக்காகவும் மாற்றும். அதனால் தான் காதலர் தினத்தில் சாக்லெட்டை பரிமாறிக் கொள்கின்றனர்.
உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் சாக்லெட்டில் இருக்கிறது. இதை ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரீஷியன்’ அமைப்பு ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளது.
சாக்லெட் உண்பதால் மூலையின் செயல்பாடுகள் கூர்மையாகின்றன. சமீபத்திய ஆராய்ச்சியில் தினம் இரண்டு டம்ளர் சூடான சாக்லெட் ஷேக் உண்பதால் மூளையின் செயல் ஆற்றல், நினைவாற்றல் , அறிவாற்றல் போன்றவை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ,சாக்லெட் உண்பதால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வராது என்பது ஆய்வில் கண்டறிந்துள்ளது.
எனவே, இந்த நாளில் உங்கள் காதலி அல்லது காதலனுக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.