ஆணுறை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரு உருவாவதைத் தடுப்பதற்கு, பலரும் ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரைகளைதான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால், இது சில நேரங்களில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
பெரும்பாலான ஆணுறைகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்தாலும், சிலவற்றில் உள்ள லேட்டக்ஸ் அலர்ஜியாலும், Nonoxynol-9 (N-9) எனப்படும் கலவை இருப்பதாலும், அல்லது சரியான லூப்ரிகேஷன் இல்லாததாலும் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், இந்த பிரச்சனைகள் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கும் கூட வழிவகுக்கும்.
லேட்டக்ஸ் அலர்ஜி :
ஆணுறை மெல்லிய லேட்டக்ஸ் எனப்படும் ரப்பர், பாலியுரிதேன், மற்றும் பாலிஐசோபிரேன் ஆகிய மெட்டீரியல்களால் செய்யப்படுகிறது. பலருக்கும் லேட்டக்ஸ் ஆணுறை அலர்ஜியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அரிப்பு, ஹைவ்ஸ் அலர்ஜி, ஆகியவை ஏற்படலாம். அது மட்டுமின்றி, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சுவாசிக்கும் பாதைகளை இறுக்கமாக மாற்றலாம். நீங்களோ அல்லது உங்கள் பார்ட்னரோ லேட்டக்ஸ் ரப்பருக்கு அலர்ஜி என்றால், நீங்கள் கட்டாயமாக இதை தவிர்க்க வேண்டும்.
ஆணுறையை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
லூப்ரிகேட்டட் ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்:
லூப் சேர்த்தல் ஒருபோதும் அதிகப்படியாக மாறாது, ஏனெனில் இது உடலுறவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் உராய்வு மற்றும் வலியைக் குறைப்பதற்காக எளிதான வழியாகும். லூப்ரிகேட்டட் அல்லது லூப்ரிகேட்டட் அல்லாத ஆணுறையைப் பயன்படுத்தும்போது, நீங்கள் கூடுதல் லூப்ரிகேஷன் பயன்படுத்தலாம். முறையான லூப்ரிகேஷன் உடலுறவை பாதுகாப்பானதாகவும் அழகானதாகவும் மாற்றும். ஆணுறையை லூப் செய்வது வலியை வெகுவாக குறைக்கிறது.அவை பெரும்பாலான மருந்தகங்களில் கிடைக்கும்.
லேட்டக்ஸ் அல்லாத ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்:
இதற்காக செய்யக்கூடிய மிக எளிதான விஷயம், லேட்டக்ஸ் அல்லாத ஆணுறைகளைப் பயன்படுத்துவதுதான். லேட்டக்ஸ் ஆணுறைகள் மிகவும் பொதுவானவை என்றாலும், பாலியூரிதீன் மற்றும் பாலிசோபிரீன் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட ஆணுறைகளும் கடந்த சில ஆண்டுகளில் பிரபலமாகி வருகின்றன.
ஸ்லிப் ஆகும் வாய்ப்பு அதிகம் :
ஆணுறைகள் பயன்பாடு அதிகபட்ச பாதுகாப்பு அளிப்பதற்கு அதை சரியான முறையில் அணிய வேண்டும். அதே போல, விந்தணு வெளியானவுடனே, ஆணுறுப்பு விறைப்புத் தன்மையை இழந்து விடும். எனவே, ஆணுறை ஸ்லிப் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, ஆணுறுப்பு நெகிழ்வுத்தன்மை அடைந்தவுடனே, பெண்ணுறுப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
பாலியூரிதீன் ஆணுறைகள்:
உங்கள் வழக்கமான ஆணுறைகளுக்கு பதிலாக பாலியூரிதீன் ஆணுறைகளை பயன்படுத்தலாம். ஏனெனில் அவை லேட்டக்ஸ் இல்லாதவை மற்றும் STD (பாலியல் ரீதியாக பரவும்) நோய்களுக்கு எதிராக நல்ல பாதுகாப்பை வழங்குகின்றன. இது போதவில்லை என்றால், நீங்கள் இந்த ஆணுறைகளுடன் எண்ணெய் சார்ந்த லூப்ரிகண்டுகளையும் பயன்படுத்தலாம்.
பாலிசோபிரீன் ஆணுறைகள்:
இந்த ஆணுறைகள் சிந்தட்டிக் லேட்டக்ஸால் செய்யப்பட்டவை, இது அலர்ஜிக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. அதோடு அதில் வழக்கமாக பயன்படுத்தும் லேட்டக்ஸ் ஆணுறை போன்ற கிடைக்கும் செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.
வெவ்வேறு ஆணுறை பிராண்டுகளை முயற்சிக்கவும்:
நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்டின் ஆணுறையைப் பயன்படுத்தும்போது எரிச்சல் ஏற்படுவதாக தோன்றினால், நீங்கள் வேறு பிராண்டை முயற்சிக்க வேண்டும். உடலுறவின்போது ஏற்படும் எரிச்சல் உங்கள் துணையை மிகவும் சங்கடப்படுத்தலாம், மோகவும் மோசமானது அது, சிறுநீர் பாதை நோய்த்தொற்று மற்றும் பாக்டீரியா வஜினோசிஸ் ஆகிய பாதிப்புகளை கூட ஏற்படுத்தவல்லது.
ஆணுறைகளை சரியான இடத்தில் வைக்கவும்:
ஆணுறைகள் குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கப்பட வேண்டும் மற்றும் காலாவதி தேதிக்குப் பிறகு பயன்படுத்தக்கூடாது. பர்ஸில் வைக்கப்படும் ஆணுறைகள் கடினமாகவும் உலர்ந்ததாகவும் மாறிவிடும். அவற்றை அணிவது கடினமாகவும் பயன்படுத்த சங்கடமாகவும் இருப்பது மட்டுமல்லாமல், அவை பாதுகாப்பாகவும் இருக்காது.
ஆணுறையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இத்தகையான பக்க விளைவுகளை அல்லது பாதிப்புகளை எதிர்கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். ஆணுறை அணிவதால் உங்களுக்கு அல்லது உங்கள் பார்ட்னருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.