Verkadalai chutney recipe: வெறும் 10 நிமிடம் போதும்...மணக்க மணக்க சுவையான வேர்க்கடலை சட்னி..!

By Anu Kan  |  First Published Mar 27, 2022, 8:47 AM IST

Verkadalai chutney recipe: சுவையான வேர்கடலை சட்னி எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


அனைவருக்கும் பிடித்த வேர்கடலை கொண்டு செய்யப்படும் இந்த வேர்க்கடலை சட்னி ரொம்பவே அட்டகாசமான சுவையைக் கொடுக்கும். இந்த வேர்கடலை சட்னியை  இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட்டால்  நாவூறும் சுவையை கொடுக்கும். அந்த அளவிற்கு ருசி மிகுந்த இந்த வேர்கடலை சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். வேர்க்கடலை சட்னியில் வைட்டமின்களும் ஊட்டச் சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. மேலும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் அற்புத சட்னியாகவும் இது உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

எனவே, சுவையான வேர்கடலை சட்னி எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை – 100 கிராம்

தேங்காய் துருவல் – 1/2  கப் 

வர மிளகாய் – 8 

புளி –  ஒரு நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 4 டீஸ்புன் 

கருவேப்பிலை – தேவையான அளவு 

செய்முறை விளக்கம்:

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில், வேர்க்கடலையை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலை இருந்தால் வறுக்க தேவையில்லை, அப்படியே பயன்படுத்தலாம்.  

பிறகு, மிக்சியில் வேர்க்கடலை, துருவிய தேங்காய், வரமிளகாய், புளி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு தாளிப்பு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை சேர்க்கவும்.

பின்னர், அவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். அதனை, முன்பு மிக்சியில் அரைத்துள்ள சட்னியில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான வேர்க்கடலை சட்னி ரெடி!

மேலும் படிக்க.....Mosquitoes: தூக்கம் கெடுக்கும் கொசு..ஓட ஓட விரட்ட ஈஸியான இயற்கை வழிமுறைகள்..!

click me!