Today astrology: ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களில் ராசி மாற்றம் அனைத்து ரசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், இது சிலருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கும் ஆபத்தை விளைவிக்கும் .
ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களில் ராசி மாற்றம் அனைத்து ரசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், இது சிலருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். சிலருக்கும் ஆபத்தை விளைவிக்கும் .
வட மாநிலங்களில், சைத்ர நவராத்திரி என்ற ஒன்று கோடை காலத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சைத்ர நவராத்திரி கொண்டாட்டம் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஜோதிட சாஸ்திரப்படி, சைத்ரா நவராத்திரியின் போது 2 முக்கிய கிரகங்களின் சேர்க்கை நடைபெற உள்ளது. இது தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சைத்ர நவராத்திரியில் சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் சேர்க்கை யார் யாருக்கு பாதிப்பதை கொடுக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் கோபத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். தவறான செயல்களை செய்வதில் இருந்து உங்களை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பண விரயம் இருக்கலாம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் சனி மற்றும் செவ்வாய் கூட்டின் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசியில் கேது அமர்ந்திருப்பதால் திடீர் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சிறிய விஷயங்களை பெறக்கூட கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு வேதனையான காலமாக இருக்கலாம். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் தடைகள் ஏற்படக்கூடும். தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி அதனால் பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். எதிரிகளை வெல்ல அது மிகவும் அவசியமாகும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.
மிதுனம்:
குழந்தைகளுடன் உறவு மோசமடையலாம். பணச் செலவு அதிகரிக்கும். முடிந்தவரை உங்கள் துணையிடம் அன்பையும் அக்கறையையும் காட்ட முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில் இணக்கமான உறவை பராமரிக்க அன்பு மிகவும் தேவைப்படலாம். இது தவிர, உங்களின் கற்பனைத்திறன் குறைவாகவும், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதில் ஆர்வம் குறைவாகவும் இருக்கும்.
கடகம்:
உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். இது தவிர, குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தினசரி வருமானம் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
சிம்மம்:
குடும்பத்தில் பதற்றமான சூழல் நிலவும். குடும்ப தகராறு உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். நிதி ரீதியாக, உங்கள் சொத்துக்களை விற்பதன் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். உடன்பிறந்தவர்களுடன் சுற்றுலா செல்லலாம்.