
காதலர் தினம் என்றவுடன் 90s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை உள்ள அனைவருக்கும் கண் முன் வந்து செல்வது ''காதல்'' தொடர்பான திரைப்பட பாடல்கள் தான்.
உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) வாலண்டைன்ஸ் டே அல்லது காதலர் தினம் கொண்டாட்டம் களைகட்ட துவங்கியுள்ளது. இந்த நாட்களில், காதலர்கள் தனது மனம் கவர்ந்தவருக்கு பிடித்த பரிசு கொடுப்பார்கள். பலர், சமூக வலைத்தளத்தில், வீடியோ, ஸ்டேட்டஸ், போன்றவற்றை பகிர்ந்து வருகின்றனர். இவை, இணையத்தி வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவுக்கு காதல் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக இருந்து வருகிறது. இந்த தினத்தில் உங்கள் காதலர் அல்லது காதலியோடு இணைந்து நல்ல காதல் படங்கள் பார்ப்பதும், பாடல்கள் கேட்பதும் தனி சுகம் தான். அப்படி ஒரு பிளான் உங்களுக்கு இருந்தால், இந்த தொகுப்பு உங்களுக்கு நிச்சயம் உதவும்.
காதளர்களோடு நீங்கள் பார்க்க வேண்டிய படங்கள், கேட்க வேண்டிய பாடல்கள்:
96 திரைப்படம்:
பள்ளிப்பருவத்தில் பிரிந்திருந்தாலும் காதல் அழகானது, மரியாதைக்குரியது என உணர்த்திய மெகா ஹிட் திரைப்படம். அதிலும் இந்த படத்தில் ''காதலே காதலே பாடல்'' இளசுகளை சுண்டி இழுக்க வைக்கிறது.
பிரேமம்:
நிவின் பாலி – மலர் டீச்சரின் கெமிஸ்டிரி இந்த படத்தில் வேற லெவல்.இந்த படத்தில் ''மலரே'' பாடல் வரும்போது மனதிற்குள் இருக்கும் காதலின் ஆழத்தின் மூழ்காதவர்களே கிடையாது.
1990களின் இறுதிவரை ஒவ்வொரு கதாநாயக நடிகரும் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு முதல் படியாகக் காதல் படங்களில் நடித்து இளசுகளின் மனங்களில் இடம்பிடித்தாக வேண்டும். 1990-களின் பிற்பகுதியில் கவனம் ஈர்க்கத் தொடங்கிவிட்ட விஜய், அஜித், மாதவன் திரைப்படங்கள்.
காதலுக்கு மரியாதை:
விஜய்யின் காதல் படங்களில் தரமான வெற்றிப் படமாகவும் இன்று மிகப் பெரிய நட்சத்திரமாக உயர்ந்து நிற்கும் அவருடைய திரைவாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகவும் அமைந்த படங்களில் ஒன்றான ‘காதலுக்கு மரியாதை’ (1997 டிசம்பர் 19) அன்று வெளியிடப்பட்டது.
அவள் வருவாளா:
1998 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதில், இடம்பெற்றிருக்கும் 'சேலையிலே வீடு கட்டவா' பாடல் இளசுகளை சுண்டி இழுக்கும்.
அஜித்தின் நடிப்பில் ''ஆசை'' திரைப்படத்தில் வெளியான,
கொஞ்ச நாள் பொறு தலைவா,
ஒரு வஞ்சிக்கொடிஇங்க வருவா பாடல், இளசுகளால் அதிகம் ரசிக்கப்பட்டவை ஆகும்.
காதலர் தினம்:
இந்த திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் ரசிகர்களை என்றென்றும் கிறங்கடிக்க வைக்கிறது. காதல் என்னும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான், 90s கிட்ஸ் நபர்களை கவர்ந்த, பாடல் ஆகும்.
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன. என்ற பாடல் வரிகள் அனைவரின் கண் முன் வந்து செல்லும்.
அப்பாஸ், வினீத், தபு நடிப்பில் வெளியான 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் திரைப்படமாகும்.
''என்ன விலை அழகே'' பாடல் வரிகள், மற்றும் ''என்னை காணவில்லையே நேற்றோடு'' பாடல்கள் 90sகிட்ஸ்களை அதிகம் கவர்ந்தவை.
கமலின் நடிப்பில், இளையராஜா இசையில் உருவான ''சத்யா'' திரைப்பட பாடல், ''வலையோசை கலகலவென'' பாடல் 90sகிட்ஸ் இளசுகளை சுண்டி இழுக்கும்.
அலைபாயுதே:
90ஸ் கிட்ஸ் முதல் 2kகிட்ஸ் வரை, எவர்கிரீன் காதல் படம் என்றால் அது அலைபாயுதே தான். வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொண்டு தனியே வாழும் ஜோடி. இவர்களுக்குள் பல சண்டை மனசஞ்சலங்கள். ஆனால் எதிர்பாராத திருப்பத்தில், இருவருக்குள்ளும் அந்த காதல் அப்படியே மாறாமல் ஆழமாக உள்ளது என்பதை உணர்த்தும் படம்.
பிரேக்கப் ஆனா ராஜா ராணி திரைப்படம் பாருங்கள்:
விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்டாலும், எதாவது ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் நிச்சயம் காதலிக்க முடியும் என்று உணர்த்தும் படம். திருமணமாகி இருவருக்கும் இடையே விரிசல் இருந்தால் நிச்சயம் பாருங்கள்.
தமிழ் திரையுலகில் பல படங்கள், பாடல்கள் வந்தாலும், ஒரு சில நாட்களுக்கு பின் மறந்து போகின்றன. ஆனால், அன்று முதல் இன்றுவரை 90s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை உள்ள அனைவருக்கும் கண் முன் வந்து செல்வது ''காதல்'' தொடர்பான திரைப்படங்கள் தான்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.