
உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 14) வாலண்டைன்ஸ் டே அல்லது காதலர் தினம் கொண்டாட்டம் களைகட்ட துவங்கியுள்ளது. இந்த நாளுக்காக ஏங்காத காதலர்களே கிடையாது எனலாம் . பல நாட்களாக மறைத்து வைத்த காதலை வெளிப்படுத்துவது முதல், காதலன் அல்லது காதலிக்கு சிறப்புப் பரிசுகள் வழங்குவது வரை, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு திட்டம் இருக்கும். ஸ்பெஷல் டேட்டிங் அல்லது அவுட்டிங் செல்லும் பலரும் விரும்புவார்கள். உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில் பிப்ரவரி 7, 2022 ல் ஆரம்பித்து பிப்ரவரி 14 ஆம் தேதி (இன்று) வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கொண்டாட்டம் இருக்கும்.
காதலர் தினம், என காதலைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.
இதில் ரோஸ் தினம், ப்ரோப்போஸ் தினம், சாக்லேட் தினம், டெடி தினம், பிராமிஸ் தினம், முத்த தினம், கட்டிப்பிடித்தல் தினம் போன்றவை முடிந்துவிட்டது. இன்று நம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த காதலர் தினம் வந்தாச்சு.
காதலை வெளிப்படுத்தும் முக்கிய தினமாக இன்று பார்க்கப்படுகிறது. காதலர்களின் முக்கியமான நாளாக இந்த காதலர் தினம் கருதப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளங்களிலும் காதலர் தினம் என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்த நாளில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு எந்த மாதிரியான கிஃப்ட் வாங்கி கொடுப்பது. எப்படி காதலை சொல்வது? எங்கே கூட்டி சொல்வது என்ற பல கேள்விகள் இருக்கும். அதற்கு பெஸ்ட் ஐடியா இருக்கு...
திட்டமிடுதல் அவசியம்:
உண்மையிலேயே காதலா் தினம் அன்று உங்கள் காதலன் அல்லது காதலிக்கு ஒரு ஆச்சாியத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் திட்டமிட வேண்டும்.
பிரம்மாண்டமான இடத்தில் அன்பானவர்களுடன் நேரம் செலவிடுவதை விட, தனிமையில் வீட்டிலேயே இருக்க ஆசைப்படுவார்கள். உங்கள் வீட்டிலேயே மெழுகுவத்தி ஏற்றி, ரோஜா மலர்களால் அலங்கரித்து, சிவப்பு மற்றும் சிரியல் பல்புகளால் அழகு கூட்டினாலே சிறப்பானதாகும் காதலர் தினம்.
இந்த தினத்தில் உங்கள் காதலர் அல்லது காதலியோடு இணைந்து நல்ல காதல் படங்கள் பார்ப்பதும் தனி சுகம் தான். அப்படி ஒரு பிளான் உங்களுக்கு இருந்தால், இந்த தொகுப்பு உங்களுக்கு நிச்சயம் உதவும்.
பிரம்மாண்டமான இடத்தில் அன்பானவர்களுடன் நேரம் செலவிடுவதை விட, தனிமையில் வீட்டிலேயே இருக்க ஆசைப்படுவார்கள். உங்கள் வீட்டிலேயே மெழுகுவத்தி ஏற்றி, ரோஜா மலர்களால் அலங்கரித்து, சிவப்பு மற்றும் சிரியல் பல்புகளால் அழகு கூட்டினாலே சிறப்பானதாகும் காதலர் தினம்.
இந்த தினத்தில் உங்கள் காதலர் அல்லது காதலியோடு இணைந்து நல்ல காதல் படங்கள் பார்ப்பதும் தனி சுகம் தான். அப்படி ஒரு பிளான் உங்களுக்கு இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் உதவும்.
மனதைத் கவரும் கிப்ட்:
காதலா் தினம் அன்று உங்கள் அன்பு குரியவர்களுக்கு காதலா் தினத்தை நினைவுபடுத்தக்கூடிய பாிசுகளை வழங்கினால் அது மிகவும் அா்த்தமுள்ள முறையில் இருக்கும். நீங்கள் தனித்துவமான பரிசாக வழங்கினால் உங்களுடைய முதல் காதலர் மிகவும் ஸ்பெஷலாக அமைந்து விடும். நீங்கள் வழங்கும் பரிசு மறக்க முடியாத மாதிரியும் உணர்ச்சி பூர்வமாகவும் இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீரகள் என்பதையும் அவர்கள் உணர்வார்கள்.
காதலர் தினத்தில் காதலைச் சொல்லும் போது:
காதலர் தினத்தன்று பெரும்பாலும் காதலர்கள் நாள் முழுவதும் ஒன்றாக செலவிட்டு, பரிசுகளை பரிமாறிக் கொள்வது போலத்தான் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு தங்களுடைய முதல் காதலர் தினமே மிக ஸ்பெஷலாக அமைந்துவிடுகிறது. அதில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்றால் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்த காதலை உங்கள் காதலி அல்லது காதலனிடம் தைரியமாக தெரிவித்து விடுங்கள். தேவை என்றால், ஒரு ஸ்பெஷல்லான இடத்திற்கு அவரை அழைத்து சென்று, அங்கு பலூன் கட்டி அலங்காரம் செய்து தொங்க விட வேண்டும்.
பார்ட்டி:
நீங்கள் நேசிக்கும் நபருடன் மாலை நேரத்தை செலவிடுவது ரம்யமான உணர்வைத் தரும். உங்கள் காதலர் தினத்தை நீங்கள் ஸ்பெஷலாக மாற்ற வேண்டும் என்றால் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு மிகவும் பிடித்த ரெஸ்டாரண்ட்டின் டின்னர் டேட் புக் செய்யுங்கள். அங்கு அவரை அழைத்து செல்லுங்கள். அதில் உங்கள் பார்ட்னருக்கு எதையெல்லாம் பிடிக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு அவரை அவருக்கு அளிக்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.