காதல் ஜோதிடம்...இந்த 5 ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் சிறப்பாக இருக்கும்...!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 14, 2022, 06:27 AM IST
காதல் ஜோதிடம்...இந்த 5 ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் சிறப்பாக இருக்கும்...!!

சுருக்கம்

இந்த 5 ராசிக்காரர்களுக்கு காதலர் தினம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த நாளில், காதல் நிச்சயமாக வெற்றி அடையும்.   

காதலர் தினத்தை கொண்டாட காதல் ஜோடிகள் பல திட்டங்களை போட ஆரம்பித்துள்ளனர். ஆண்களும் பெண்களும் தங்கள் ஜோடிகள் ஆச்சரியப்படுத்த புதிய யோசனைகளைப் பற்றி சிந்திக்கிறார்கள். காதலர்கள் தங்கள் ஜோடியை ஸ்பெஷலாக உணர வைக்க பல திட்டங்களை தீட்டி வருகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிகளின் காதல் ஜோடிகளுக்கு இந்த நாள் அற்புதமானதாகவும் மறக்கமுடியாததாகவும் இருக்கும்.  இன்று சில ராசிக்காரர்களுக்கு காதலை சொன்னால் மிகவும் சிறப்பானதாக இருக்கும். அவர்களின் விவரத்தை அறிவோம்.

மிதுனம்: 

இந்த ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) இந்த காதலர் தினம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த நாளில் காதலன் மற்றும் காதலி மீது காதல் அதிகரிக்கும். புதிதாக காதலை சொல்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். திருமணம் செய்துகொள்ளும் ஆர்வம் உடையவர்கள் தங்கள் காதலன் மற்றும் காதலியை பெற்றோருக்கு இப்போது அறிமுகம் செய்தால், அவர்களது சம்மதமும் உடனே கிடைக்கும். திருமணமான தம்பதிகளிடையில் பரஸ்பரம் அன்பு வளரும். 

கடகம்: 

கடக ராசியை சேர்ந்த காதல் ஜோடிகளுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. நிச்சயதார்த்தம் நடக்கலாம். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பார்கள். இது அவர்களின் உறவில் காதல் அதிகரிக்கும். அவர்கள் தங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள் மற்றும் அவர்களின் துணையிடமிருந்து சிறந்த பதிலைப் பெறுவார்கள். திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகள் தங்கள் துணையை குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தலாம். 

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் அன்பு மழை பொழியும். காதல் மற்றும் திருமணமான தம்பதிகளின் உறவு பலப்படும். திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் சம்மதிக்காத தம்பதிகள் இப்போது ஒப்புக் கொள்ளலாம். சிங்கிள் ஆக இருப்பவர்களுக்கு ஒருவரின் முன் காதலை வெளிப்படுத்த இது ஒரு நல்ல நேரம். காதல் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் காதல் உறவை ஏற்க தயாராவார்கள். புது ஜோடிகளுக்கு அன்பை வெளிப்படுத்த இது ஒரு நல்ல நேரமாக இருக்கும்.

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அன்பான நாள் என்பதால், மிகவும் இனிமையாக இருக்கும். சிங்கிள் ஆக இருப்பவர்கள் தங்கள் துணையை கண்டுபிடிக்க முடியும். தம்பதிகளிடையே காதல் அதிகரிக்கும். உங்கள் காதல் துணை, இந்த காலத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கலாம். உறவில் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் இன்னும் நெருக்கமாவார்கள். இவர்களுக்கிடையே காதல், அன்பு ஆகியவை முன்பை விட அதிகரிக்கும்.

துலாம்:

துலாம் இந்த ராசிக்காரர்களுக்கு தங்கள் இழந்த காதலை திரும்பப் பெற எல்லா வாய்ப்புகளும் உள்ளன. பிப்ரவரி 14 உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். இந்த நாளில், உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசைப் பெறுவீர்கள். இந்த சிறப்பு நாளில் நீங்கள் ஒருவரிடம் முன்மொழிந்தால், உங்கள் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படலாம். திருமணப் பேச்சு வார்த்தைகள் வராமல் இருந்தால் காரியங்கள் கைகூடும்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!