"ஹேப்பி பீரியட்ஸ் ராகினி" தனது முதல் பீரியட்ஸ் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் 13 வயது சிறுமி..!!

Published : Jul 20, 2023, 08:34 PM ISTUpdated : Jul 20, 2023, 08:39 PM IST
"ஹேப்பி பீரியட்ஸ் ராகினி" தனது முதல் பீரியட்ஸ் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் 13 வயது சிறுமி..!!

சுருக்கம்

உத்தரகாண்டில் தந்தை ஒருவர் தனது மகளின் முதல் மாதவிடாயை கேக் வெட்டி கோலாகலமாகக்  கொண்டாடினார். 

உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரில் வசிக்கும் ஜிதேந்திர பட், மகள் ராகினிக்கு (13 வயது) முதல் மாதவிடாய் நேற்று (ஜூலை 19) தொடங்கியது. இதனால் அவர் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்ய திட்டமிட்டார். இதற்காக அவர் மண்டபம் ஒன்றினை முன்பதிவும் செய்துள்ளார். அந்த பார்ட்டியில் குடும்பத்தினர் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்களை அழைத்தனர். இது ராகினியின் முதல் மாதவிடாய் என்பதால், பார்ட்டி ஹாலில் வெள்ளை இளஞ்சிவப்பு பலூன்களால் அலங்கரிக்கப்பட்டது. 

சமுதாயத்திற்கு ஒரு செய்தியை வழங்குவதற்காகவும், இந்த நேரத்தில், ராகினியை ஸ்பெஷலாக உணர குடும்பத்தினர் இதை கொண்டாடினர். மாதவிடாய் என்பது ஒரு நோயல்ல, பெண்ணின் வாழ்வின் ஒரு அங்கம் என்ற செய்தியை சமூகத்திற்குக் கொடுத்தார்.

பீரியட் தீமில் செய்யப்பட்ட கேக்:
பார்ட்டியில் பீரியட் கருப்பொருளில் கேக் ஒன்று ராகினிக்கு அவளது அப்பா வழங்கினார். அந்த கேக் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்தது. "ஹேப்பி பீரியட்ஸ் ராகினி" என்று கேக்கில் எழுத சொல்லும் போது கேக் உரிமையாளர் தன்னை விசித்திரமாக பார்த்ததுமட்டுமல்லாமல், தன்னை பார்த்து முறைத்தத்காக ஜிதேந்திரா சொன்னார். மேலும் தனது வாழ்வில் முதன்முறையாக இதுபோன்ற கேக்கை உருவாக்குகிறேன் என்று உரிமையாளர் கூறியதாக ஜிதேந்திரா கூறினார்.

இதையும் படிங்க: மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறதா? அப்போ இந்த சாறு குடிங்க...நிவாரணம் கிடைக்கும்..!!

இந்த பீரியட் பார்ட்டியை விரும்பாத ஜிதேந்திராவின் உறவினர்கள் பலர் பார்டிக்கு வரவில்லை. அதுபோல் தனது மகளுக்கு சானிட்டரி பேட்களை பரிசாக வழங்குமாறு ஜிதேந்திரா தன் 
நண்பர்களிடம் கோரிக்கை விடுத்ததால், பார்ட்டிக்கு வந்த அனைவரும் அதையே ராகினிக்கு வழங்கினார்கள். மேலும் தனது மகளின் பீரியட் குறித்து ஜிதேந்திரா கூறுகையில், ராகினிக்கு முதல் மாதவிடாய் தொடங்கியவுடன், அவள் பதட்டமானாள். அதுகுறித்து விளக்கியவுடன் அமைதி அடைந்தாள். சொல்லப்போனால் நாங்கள் அவளுக்கு 11 வயதிலிருந்தே, மாதவிடாய் பற்றி அவளிடம் சொல்ல ஆரம்பித்தோம்.

இதையும் படிங்க:  மாதவிடாய் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையா? கவலைப்படாதீங்க... இந்த டிப்ஸ் கண்டிப்பாக உங்களுக்கு உதவும்..!

சும்மா சொன்னேன் மகளுக்கு பீரியட் பார்ட்டி செய்வேன்:
"நான் பார்த்து இருக்கிறேன் கடைக்காரர்கள் செய்தித்தாளில் சுற்றப்பட்ட சானிட்டரி பேட்களைக் கொடுப்பதை.  மாதவிடாய் குறித்து மக்கள் மனதில் இருக்கும் கட்டுக்கதையை ஒருநாள் உடைக்க
வேண்டும் என்று நான் நினைத்தேன். அந்தக் காலத்துல சொன்னேன் எனக்கு ஒரு மகள் இருக்கும்போது, அவளுக்கு பீரியட் பார்ட்டி செய்வேன்.  இப்போது அந்த விஷயம் உண்மையாகிவிட்டது". இந்த பார்ட்டி குறித்த புகைபடங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் தற்போது அது வைரலாகி வருகிறது மற்றும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தும் வருகின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்