இந்தியாவின் பணக்கார MLA டி.கே சிவக்குமார்! ஆனால் இந்த பாஜக தலைவரின் சொத்து மதிப்பு ரூ.1,700 மட்டுமே..

By Ramya s  |  First Published Jul 20, 2023, 3:41 PM IST

கர்நாடகா துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான டி.கே சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.வாக உள்ளார்.


இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 13.63 கோடி ஆகும் அதே சமயம் குற்ற வழக்குகள் இல்லாதவர்களை விட (ரூ. 11.45 கோடி) கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் அதிகமாக (₹16.36 கோடி) சொத்து வைத்துள்ளனர். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (  Association for Democratic Reforms - ADR) வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அந்த அமைப்பு 28 மாநில சட்டசபைகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் இருந்து 4,001 எம்எல்ஏக்களை ஆய்வு செய்தது. அதன்படி கர்நாடகா துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான டி.கே சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

அதிக சொத்துக்கள் கொண்ட முதல் 10 எம்எல்ஏக்கள்

Tap to resize

Latest Videos

undefined

1. டி கே சிவகுமார் (INC) - கனகபுரா, கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ரூ.1413 கோடி

2. கே எச் புட்டஸ்வாமி கவுடா (IND) - கௌரிபிதனூர், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ரூ.1267 கோடி

3. பிரியாகிருஷ்ணா (INC) - கோவிந்தராஜநகர், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ரூ.1156 கோடி

4. என். சந்திரபாபு நாயுடு (TDP) - குப்பம், ஆந்திரப் பிரதேசம் 2019 - மொத்த சொத்துக்கள்: ரூ.668 கோடி

5. ஜெயந்திபாய் சோமாபாய் படேல் (BJP) - மான்சா, குஜராத் 2022 - மொத்த சொத்துக்கள்: ரூ.661 கோடி

6. சுரேஷா பி எஸ் (INC) - ஹெப்பல், கர்நாடகா 2023 - மொத்த சொத்துக்கள்: ரூ. 648 கோடி

7. ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி (YSRCP) - புலிவெண்ட்லா, ஆந்திரப் பிரதேசம் 2019 - மொத்த சொத்துக்கள்: ரூ.510 கோடி

8. பராக் ஷா (BJP) - காட்கோபர் கிழக்கு, மகாராஷ்டிரா 2019 - மொத்த சொத்துக்கள்: ரூ. 500 கோடி

9. டி.எஸ். பாபா (INC) - அம்பிகாபூர், சத்தீஸ்கர் 2018 - மொத்த சொத்துக்கள்: ரூ.500 கோடி

10. மங்கள்பிரபாத் லோதா (BJP) - மலபார் ஹில், மகாராஷ்டிரா 2019 - மொத்த சொத்துக்கள்: ₹441 கோடி

மிகக்குறைந்த சொத்துக்கள் கொண்ட முதல் 10 எம்எல்ஏக்கள்

1. நிர்மல் குமார் தாரா (BJP) - சிந்து (SC), மேற்கு வங்காளம் 2021 - மொத்த சொத்துக்கள்: ரூ.1,700

2. மகரந்தா முதுலி (IND) - ராயகடா, ஒடிசா 2019 - மொத்த சொத்துக்கள்: ரூ.15,000

3. நரிந்தர் பால் சிங் சவ்னா (ஏஏபி) - ஃபசில்கா, பஞ்சாப் 2022 - மொத்த சொத்துக்கள்: ரூ.18,370

4. நரிந்தர் கவுர் பராஜ் (ஏஏபி) - சங்ரூர், பஞ்சாப் 2022 - மொத்த சொத்துக்கள்: ரூ.24,409

5. மங்கள் கலிந்தி (JMM) - ஜுக்சலை (SC), ஜார்கண்ட் 2019 - மொத்த சொத்துக்கள்: ரூ.30,0006.

6. புண்டரிகாக்ஷ்ய சாஹா (AITC) - நபத்விப், மேற்கு வங்காளம் 2021 - மொத்த சொத்துக்கள்: ரூ.30,423

7. ராம் குமார் யாதவ் (INC) - சந்திராபூர், சத்தீஸ்கர் 2018 - மொத்த சொத்துக்கள்: ரூ.30,464

8. அனில் குமார் அனில் பிரதான் (SP) - சித்ரகூட், உத்தரப் பிரதேசம் 2022 - மொத்த சொத்துக்கள்: ரூ.30,496

9. ராம் டாங்கோர் (பாஜக) - பந்தனா (எஸ்டி), மத்தியப் பிரதேசம் 2018 - மொத்த சொத்துக்கள்: ரூ.50,749

10. வினோத் பிவா நிகோல் (சிபிஐ(எம்)) - தஹானு (எஸ்டி), மகாராஷ்டிரா 2019 - மொத்த சொத்துக்கள்: ரூ.51,082

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) ஆகியவை நாடு முழுவதும் உள்ள மாநில சட்டசபைகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தற்போதைய எம்.எல்.ஏ.க்களின் சுயமாகப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்துள்ளன. எம்.எல்.ஏ.க்கள் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் இருந்து இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. 28 மாநில சட்டசபைகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 4033 எம்எல்ஏக்களில் மொத்தம் 4001 பேர் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளனர். 

click me!