எச்சரிக்கை.. இந்த அன்றாட உணவுகள், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை ஏற்படுத்துமாம்..

Published : Jul 20, 2023, 10:29 AM IST
எச்சரிக்கை.. இந்த அன்றாட உணவுகள், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை ஏற்படுத்துமாம்..

சுருக்கம்

பேக்கேஜ்ட் உணவுகளில் உள்ள லேபிளை படிப்பதன் மூலம் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் அல்லது பிற கொடிய நோய்களால் உங்களை ஆபத்தில் ஆழ்த்தும் உணவுகளை அகற்ற உதவும். 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் தற்போது பெரும்பாலான மக்களின் தவிர்க்க முடியாத உணவாக மாறிவிட்டது. இந்த தின்பண்டங்கள் அல்லது கவர்ச்சிகரமான பேக்கேஜ்களுடன் கூடிய உணவுகளில் செயற்கை நிறங்கள், இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பாதுகாப்புகள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளன. மேலும் புற்றுநோயை உண்டாக்கும் செயற்கை இனிப்புகள் இந்த உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.

சமீபத்தில், உலகசுகாதார மையம், அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பு, மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் பொருளாகஇருக்கலாம் என்று அறிவித்தது, செயற்கை இனிப்புகளை உட்கொள்வதால் நீரிழிவு முதல் இதய நோய் வரை நாள்பட்ட நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே பேக்கேஜ்ட் உணவுகளில் உள்ள லேபிளை படிப்பதன் மூலம் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் அல்லது பிற கொடிய நோய்களால் உங்களை ஆபத்தில் ஆழ்த்தும் உணவுகளை அகற்ற உதவும். 

உணவு வண்ணங்கள்

பாலாடைக்கட்டி, தானியங்கள், சிப்ஸ், குக்கீகள் மற்றும் மஞ்சள் நிற பானங்கள் ஆகியவற்றில் காணப்படும் மஞ்சள் உணவு வண்ணங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதன் பயன்பாடு காரணமாக சிறுநீரகம் மற்றும் குடல் கட்டிகளில் அதிக ஆபத்து இருப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

காய்கறி எண்ணெய்கள்

இந்த எண்ணெய்கள் எல்லா உணவுப் பொருட்களிலும் உள்ளன. சோயாபீன், சோளம், சூரியகாந்தி போன்ற பொருட்களில் இந்த எண்ணெய் உள்ளன.உறைந்த உணவுகள், ரொட்டிகள், சிப்ஸ், சாலட் டிரஸ்ஸிங், போன்றவற்றில் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது..

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்  'குரூப் 1' புற்றுநோயாக வகைப்படுத்தப்படுகின்றன, அவற்றில் பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் உள்ளன. அவற்றில் நைட்ரேட்டுகள் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளன, அவை தமனிகளை கடினப்படுத்துகின்றன. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தவிர்த்து, பிரெஷ்ஷான இறைச்சியை வாங்குவது நல்லது.

சுக்ரோலோஸ்

டயட் சோடாக்கள், , சிரப் மற்றும் எனர்ஜி பானங்களில் காணப்படும் சுக்ரோலோஸ் ஒரு செயற்கை இனிப்பு ஆகும், இது நல்ல குடல் பாக்டீரியாக்களுக்கு தீங்கு விளைவிக்கும். சுக்ரோலோஸ் ஒற்றைத் தலைவலி, மோசமான மனநிலை மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். '

மோனோசோடியம் குளூட்டமேட் (MSG)

சூப்கள், உறைந்த உணவுகள், சிப்ஸ், 'மாட்டிறைச்சி சுவை' மற்றும் துரித உணவு ஆகியவற்றில் காணப்படுகிறது. உணவின் சுவையை அதிகரிக்க MSG பயன்படுகிறது. ஆனால் உங்கள் வயிறு நிரம்பிவிட்டது என்று உங்கள் மூளைக்குச் சொல்லும் சமிக்ஞைகளை இது தடுக்கிறது. MSG போன்ற 'சுவை அதிகரிக்கும்' உணவுகளை நீங்கள் சாப்பிடக்கூடாது.

 அசோடிகார்பனாமைடு

அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பிரட் அடிப்படையிலான பொருட்களில் ஒரு பொதுவான மூலப்பொருள், அசோடிகார்பனாமைடு. இது மாவை வெண்மையாக்கும் முகவராகவும், நெகிழ்வுத்தன்மையுடன் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலப்பொருள் நுரையீரல் மற்றும் இரத்த புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சோடியம் பாஸ்பேட்

இந்த சேர்க்கையானது இறைச்சிகளை பதப்படுத்தும் போது ஈரமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கும். கனிம பாஸ்பேட் உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இது சிறுநீரக நோய், பலவீனமான எலும்புகள் மற்றும் அகால மரணம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

ஆண்களே கவனம்.. கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதால் முடி உதிர்தல் ஏற்படுமாம்.. சர்க்கரை அளவை எப்படி குறைப்பது?

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Soft Idli Tips : தட்டில் ஒட்டாமல் 'பஞ்சு' மாதிரி இட்லி வர சூப்பரான சில ஐடியாக்கள் இதோ!!
Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து