இந்தியாவை பொறுத்தவரை வால்மிளகு சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பல ஆண்டுகளாக யுனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது.
காய்ச்சல் மற்றும் அஜீரணத்திற்கு சிகிச்சையளிப்பது முதல் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபடுவது வரை, வால் மிளகு பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. க்யூபெப் பெர்ரி எனப்படும் இந்த வால்மிளகு, கருப்பு மிளகு போலவே இருக்கும். ஆனால் இதில் சிறிய வால் போன்று இருக்கும். எனவே வால் மிளகு என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஜாவாவில் பரவலாக பயிரிடப்படுகிறது, அதனால் இது ஜாவா மிளகு என்றும் அழைக்கப்படுகிறது.
வால்மிளகு ஒரு காரமான நறுமண வாசனையைக் கொண்டுள்ளது. இது சில நாடுகளில் சமையலில் சுவையை அதிகரிக்கவும், சில பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வால்மிளகு சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பல ஆண்டுகளாக யுனானி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. இது , ஆஸ்துமா எதிர்ப்பு, கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு, வயிற்றுப்போக்கு, சளியை குணப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வால்மிளகின் தாவரவியல் பெயர் பைபர் கியூபேபா.
undefined
டெங்கு எச்சரிக்கை: இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்..
வாய் துர்நாற்றத்தை போக்கும்
கியூபெப் மிகவும் நறுமணம் மற்றும் ஆண்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது, எனவே இது பல ஆண்டுகளாக பல் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது வாய் துர்நாற்றத்தை போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
பாக்டீரியா எதிர்ப்பு & பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்:
வால்மிளகு அற்புதமான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது, மேலும் இது பொடுகை மிகவும் திறம்பட தடுக்க முடி எண்ணெய் மற்றும் ஹேர் பேக்குகளில் சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது.
சளி மற்றும் இருமலுக்கு தீர்வு
ஜலதோஷம், இருமல் மற்றும் லேசான காய்ச்சலின் போது கூட எடுக்கக்கூடிய சிறந்த பொருட்களில் வால்மிளகு ஒன்றாகும், ஏனெனில் இது ஆண்டிபிரைடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேநீர் வடிவில் எடுத்துக்கொள்கிறோம். நாம் ஜலதோஷத்தால் அவதிப்படும் போது வால்மிளகு தேநீரை குடிப்பதால் தீர்வு கிடைக்கும். மேலும் இது தலைவலியை நீக்குகிறது.
ஈஸ்ட்ரோஜெனிக் எதிர்ப்பு பண்புகள்:
வால்மிளகில் ஈஸ்ட்ரோஜெனிக் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. குறைந்த டெஸ்டோஸ்டிரோன் உள்ள ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகமாக இருக்கும். அதற்கு சிகிச்சையளிக்க, ஈஸ்ட்ரோஜனைக் குறைக்கும் உணவு பொதுவாக அவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வால்மிளகு ஈஸ்ட்ரோஜனைக் குறைப்பதால், அதை அவர்களின் உணவில் சேர்த்துக் கொள்வது பெரிதும் உதவும்.
மிளகைப் போலவே, வால்மிளகும் காரமான சுவை கொண்டது. எனவே அதனை மிதமாக உட்கொள்ள வேண்டும், நாம் அதை அதிகமாக உட்கொண்டால் அது வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்கள் வால்மிளகை உட்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் அதிகரிக்கும் வயிற்றுப் பிரச்சனைகள்.. எதை சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்?